முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய கடற்படையினரை வேவு பார்த்த சீன உளவு சேவைக் கப்பல்

வியாழக்கிழமை, 1 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,செப்.- 2 - இந்திய கடற்படையினரை வேவு பார்த்த சீன உளவுக்கப்பல் ஒன்று இலங்கை துறைமுகத்திற்குள் பிரவேசித்துள்ளதாக இந்தியாவின் என்.டி.டீ.வி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. மீன்பிடி படகு போல பயணித்த சீனாவின் உளவு சேவைக்கு சொந்தமான கப்பல் பல்வேறு தகவல்களை திரட்டிக் கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. இந்த கப்பலை இந்திய கடற்படையினர் கண்காணித்ததை அடுத்து அவர்கள் இலங்கை துறைமுகத்துக்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்தமானின் சிறிய தீவுகளுக்கு மீன்பிடி படகு போல் பிரவேசித்த சீனக் கப்பல் பல்வேறு விதமான செய்திகளை சேகரித்துக்கொண்டுள்ளதாக அந்த ஊடகம் தெரிவிக்கிறது. மேலும் கடந்த மாதத்திலும் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சீன உளவுக்கப்பலில் 22 ஆய்வுக் கூடங்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் இத்தகைய படகொன்று கொழும்பு துறைமுகத்தில் வந்தடையவில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்