முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிபியா புரட்சிப்படையிடம் சரணடைய தயார் கடாபி மகன் ஸாதி அறிவிப்பு

வியாழக்கிழமை, 1 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

திரிபோலி,செப்.- 2 - லிபியாவில் அதிபர் கடாபியை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்த போராட்டத்தில் புரட்சி படையினருக்கு அமெரிக்கா ஆயுத உதவி செய்துள்ளது. இதனால் கடாபியின் ராணுவம் தாக்குப்பிடிக்காமல் பின்னடைந்துள்ளது. தலைநகர் திரிபோலி உட்பட பல முக்கிய நகரங்களை புரட்சிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும் கடாபின் மனைவியும் குழந்தைகளும் பக்கத்து நாடான அல்சீரியாவில் தஞ்சமடைந்துள்ளனர். கடாபியும் அவரது மகன்களில் ஒரு வரான ஸாதியும் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இதனால் புரட்சிப்படையினர் அவர்களை கொன்று விடப்போவதாக அறிவித்தினர். இந்த நிலையில் கடாபியின் மகன் ஸாதி புரடசிபடையிடம் சரணடைய போவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அவர் புரட்சிப்படையின் தளபதிகளில் ஒருவரான அப்துல் ஹக்கீம் பெல்ஹாச்சிடம் தெரிவித்ததாக தெரிகிறது. இது குறித்து அப்துல் ஹக்கீம் கூறியதாவது கடாபியின் மகன் ஸாதி  என்னை தொடர்பு கொண்டு தான் சரண் அடைய விரும்புவதாகவும் கூறி மேலும் தனக்கு உயிர்ப்பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நானும் அவருடைய உயிருக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. மேலும் அவரோடு இருக்கும் அனைவரும் சரணடைந்தால் நல்லது. லிபிய மண்ணில் ரத்தக்கரை படக்கூடாது என்பது தான் எங்கள் ஆசை என்று அவருக்கு விளக்கி கூறினேன் . இவ்வாறு அப்துல் ஹக்கீம் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்