முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள முதல்வர் அலுவலகத்தில் 24 மணி நேர கால் சென்டர்

வியாழக்கிழமை, 1 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம், செப்.- 2 - கேரள முதல்வர் உம்மன்சாண்டி தனது அலுவலகத்தில் 24 மணி நேர கால் சென்டரை நேற்று திறந்துவைத்தார்.  கேரளாவில் மக்கள் தங்களது குறைகளை முதல்வர் அலுவலகத்திற்கு தெரிவிப்பதற்காக அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி ஒரு கால் சென்டரை தனது அலுவலகத்தில் அமைத்துள்ளார். 24 மணி நேரமும் செயல்படக்கூடிய இந்த கால் சென்டரை உம்மன்சாண்டி நேற்று துவக்கி வைத்தார். இந்தியாவிலேயே ஒரு முதல்வரின் அலுவலகத்தில் இப்படி ஒரு கால் சென்டர் அமைக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கால் சென்டரில் 16 ஊழியர்கள் ஷிப்ட் முறையில் பணியாற்றுவார்கள். ஒரே சமயத்தில் 7 கால்களை தொடர்புகொள்ளும் விதத்தில் இந்த கால் சென்டர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்கள் மூலம் பெறப்படும் தகவல்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்படும். கால் செய்தவருக்கு இதுகுறித்த தகவல்கள் எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பிவைக்கப்படும். முதல்வரின் அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளக்கூடிய இந்த தொலைபேசி எண்களை அழைப்பதற்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது. இந்த கால் சென்டர் துவக்கிவைக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள்  2,300 பேர்  கால் செய்துள்ளனர். முதல் முதலாக வந்த ஒரு அழைப்பில் அரசு ஊழியரான தங்களது தந்தை மரணமடைந்துவிட்டதாகவும் அதனால் தங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்றும் அழைப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு உரிய நேரத்தில் உடனுக்குடன் தகவல்கள் அனுப்பி வைக்கப்படும் என்று முதல்வர் உம்மன்சாண்டி பதில் அனுப்பியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago