முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. கூட்டணியிலிருந்து காங்கிரசை வெளியேற்றவேண்டும்- வீரமணி

ஞாயிற்றுக்கிழமை, 6 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, மார்ச்.- 6 - தி.மு.க. கூட்டணியிலிருந்து காங்கிரசை வெளியேற்ற வேண்டும் என்று கருணாநிதிக்கு வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இதுகுறித்து திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, தி.மு.க.வுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:- இன்று (நேற்று) காலை தி.மு.க. தலைவர் கருணாநிதியின் அறிக்கை​நியாய உணர்வும் சுயமரியாதை உணர்வும் உடைய அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியிருப்பதை போன்றே நமக்கும் அதே எண்ணம் ஓடியது. தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் இடம் பெற காங்கிரஸ் கட்சி மிகவும் அதிகமான,நடை முறைக்கு சாத்தியமற்ற தொகுதிகளை பிடிவாதமாகக் கேட்பதும், கூட்டணி நெறி முறைகளிலேயே கேள்விப்படாத வகையில், தாங்கள் தான் அத்தொகுதிகளையும் கூட தேர்வு செய்வோம் என்று நிபந்தனை விதிப்பதும் என்ற நிலை காங்கிரஸ் கட்சி கொடுக்கும் இடத்தில் உள்ள கட்சியாகவும், தி.மு.க. அவர் தொடுக்கும் நிபந்தனை ஏற்கும் ஒரு கட்சியாகவும் உள்ளது போன்ற ஒரு தோற்றத்தை மக்களிடையே ஏற்படுத்துகிறது. 

தி.மு.க. தனித்த பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கக்கூடாது என்பதற்காக மறைமுகமாக அதற்கு போதிய அளவு போட்டியிட வாய்ப்பற்ற ஒரு நிலையை உருவாக்கவே இக் கோரிக்கை என்பது சற்று நிதானமாகச் சிந்திக்கும் எவருக்கும்​நடுநிலையாளருக்கும் தெளிவாகவே புரியும். 

இப்படிப்பட்ட நிபந்தனைகளுக்குட்பட்டு தேர்தலை சந்தித்துத்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் தி.மு.க. இருக்கவில்லை. மக்களுடைய பேராதரவினைப் பெற்று பட்டி தொட்டியெல்லாம் கிளைகளுடன் கட்டுப்பாடு மிக்க தொண்டர்களை, தோழர்களைக் கொண்ட​பல்வேறு சோதனைகளைச் சந்தித்து கரையேறி வெற்றி கொண்ட இயக்கமாகும். எனவே, தமிழர்களின் இன உணர்வு, சுய மரியாதை காக்கவே தந்தை பெரியார் கொள்கை லட்சியப்படி அறிஞர் அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்டு, இன்று அந்தக் கொள்கைப் பாரம்பரியத்தை விடாமல் தொடரும் கருணாநிதி இனமானப் பேராசிரியர் போன்றவர்களால் நடத்தப் பட்டு வரும் நிலையில் இது போன்ற நிபந்தனைகளுக்குப் பணிந்து போகாமல் பெரும்பான்மை வரும் அளவுக்கு தி.மு.க. செயல்வீரர்​வீராங்கனைகளுக்கு அவ்வாயிப்பினை அளித்து கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காக்கும் இயக்கம் மீண்டும் பெருஉரு(விஸ்வரூபம்)க் கொள்ள வேண்டும். சுதந்தரமாக, முடிவு எடுக்க வேண்டுமென கருணாநிதிக்கும், தி.மு.க.வின் உயர்நிலை, அரசியல் செயற்குழுத் தோழர்களுக்கும் தாய்க் கழகம் சார்பில் கனிவான வேண்டுகோளை முன் வைக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கி. வீரமணி கூறி உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago