முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மிக்சி, கிரைண்டர், பேன் வழங்கும் இலவச திட்டத்தை எதிர்த்து வழக்கு-சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி

வெள்ளிக்கிழமை, 2 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,செப்.- 3 - தமிழக மக்களுக்கு இலவசமாக மிக்சி, கிரைண்டர், பேன் ஆகியவைகள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்ததை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் செய்த ஜெயலலிதா, அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பல்வேறு இலவச திட்டங்களை அமுல்படுத்தப்படும் என்று அறிவித்தார். இலவசமாக 20 கிலோ அரிசி வழங்கப்படும். ஏழை பெண்களுக்கு 4 கிராம் தங்கம் இலவசமாக  ழங்கப்படும். ஆடு,மாடுகள் இலவசமாக வழங்கப்படும். வேலைக்கு போகும் பெண்களின் வேலை சுமையை குறைக்கும் வகையில் மிக்சி, கிரைண்டர், பேன் ஆகியவைகள் இலவசமாக வழங்கப்படும் என்றும் மேலும் பல இலவச திட்டங்களை அறிவித்தார்.  தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெற்று ஆட்சியை மீண்டும் பிடித்தது. முதல்வர் ஜெயலலிதா 3-வது முறையாக முதல்வர் பதவியை ஏற்றார். முதல்வர் பதவியை ஏற்றவுடன் ஏழை பெண்கள் திருமணத்தின்போது தாலிக்கு 4 கிராம் தங்கம், 20 கிலோ இலவச அரிசி, முதியோர் உதவித்தொகையை ரூ.500-லிருந்து 1000 மாக உயர்த்தி அறிவித்தார். வருகின்ற 15-ம் தேதி அண்ணா பிறந்த தினமாகும். அன்றைய தினம் இலவசமாக மிக்சி, கிரைண்டர், பேன் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா தொடங்கிவைக்க உள்ளார். இந்தநிலையில் இலவசமாக மிக்சி,கிரைண்டர், பேன் வழங்கப்படுவதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் ஒரு வழக்கறிஞர் பொதுநலன் வழக்காக தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சதாசிவம், சவாண் ஆகியோர் அடங்கிய பெஞ்சில் விசாரணைக்கு வழக்கு வந்தது. அப்போது பொதுநலன் வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் தீர்ப்பு கூறினர். தமிழகத்தில் அனைத்து பெண்களுக்கும் பாரபட்சமின்றி மிக்சி,கிரைண்டர், பேன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இப்படி இலவசமாக வழங்குவதில் தவறு எதுவும் இல்லை என்றும் நீதிபதிகள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்