முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசன்அலி ஆரோக்கிய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்

வெள்ளிக்கிழமை, 2 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, செப்.-3 - கறுப்புப்பண முதலை ஹசல் அலியின் ஆரோக்கிய நிலை குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரை சேர்ந்தவர் ஹசன் அலி. இவர் குதிரைப்பண்ணை உரிமையாளர். ஹசன் அலி பல வழிகளில் முறைகேடாக பணம் சம்பாதித்து அதற்கு வரிகட்டாமல் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து உள்பட பல்வேறு நாடுகளில் சுமார் ரூ.30 ஆயிரம் கோடிக்கு கறுப்புப்பணம் பதுக்கிவைத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சர்வதேச ஆயுத கடத்தல் மன்னன் அத்னன் ஹசோக்கிக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. சிறையில் அடைக்கப்பட்ட ஹசன் அலி, தமக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் உடனடியாக மருத்துவம் பார்க்க வேண்டும் என்று கோரி மும்பை ஐகோர்ட்டில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். இதனையொட்டி அவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. இதை எதிர்த்து மத்திய அமலாக்கப்பிரிவினர் சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்தனர். இதனை ஏற்றுக்கொண்ட சுப்ரீம்கோர்ட்டு, ஹசன் அலிக்கு கொடுக்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு நேற்றுடன் முடிவடைந்தது. இதனையொட்டி நேற்றும் ஹசன் அலி தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெற்றது. அப்போது ஹசன் அலி சார்பாக ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில் ஹசன் அலி பல்வேறு நோயால் அவதிப்பட்டு வருகிறார். சிறுநீரக கோளாறால் பெரிதும் பாதிக்கப்பட்டு வரும் ஹசன் அலி உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். அதனால் ஹசன் அலியின் இடைக்கால ஜாமீன் மனுவை ஏற்றுக்கொண்டு அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றார். இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் அல்டாமஸ் கபீர், எஸ்.எஸ்.நிஜ்ஜார் ஆகியோர், ஹசன் அலியின் ஆரோக்கிய நிலை குறித்து இன்று அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்