முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முஸ்லீம்களுடன் கிறிஸ்தவர்கள் மோதல் நைஜீரியாவில் 20 பேர் கொல்லப்பட்டனர்

சனிக்கிழமை, 3 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

லாஜோஸ், செப்.- 3 - நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 20 பேர் கொல்லப்பட்டனர்.  உலகம் முழுவதும் நேற்று ரம்ஜான் பண்டிகை இஸ்லாமியர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நைஜீரியா நாட்டில் ஜோஸ் என்ற இடத்தில் உள்ள பள்ளிவாசலிலும் தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்து பள்ளிவாசலை விட்டு மக்கள் வெளியேறிய போது திடீரென துப்பாக்கி சுடும் சப்தம் கேட்டது. இதைத் தொடர்ந்து பலரும் சுட்டு கொல்லப்பட்டனர். இது குறித்து அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் கூறும் போது,  சில நாட்களுக்கு முன் நடந்த கிறிஸ்தவர்களின் தாக்குதலின் எதிரொலியாகவே இந்த சம்பவம் நடந்துள்ளது. எதிர்பாராமல் வகையில் நடந்த இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் நகர் முழுவதும் பதட்டமாக காணப்பட்டது. இதையடுத்து ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விரைவில் அங்கு அமைதி திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்