முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என் குழுவினரை துன்புறுத்தினால் சும்மா இருக்கமாட்டேன் மத்திய அரசுக்கு ஹசாரே எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 4 செப்டம்பர் 2011      ஊழல்
Image Unavailable

புனே,செப்.- 4 - எனது குழுவினரை துன்புறுத்தினால் சும்மா இருக்கமாட்டேன் என அன்னா ஹசாரே மத்திய அரசை எச்சரித்துள்ளார்.  ஊழலை ஒழிக்க முழுமையான லோக்பால் மசோதா கோரி டெல்லியில் 13 நாள் உண்ணாவிரதம் இருந்தவர் அன்னா ஹசாரே. அவருக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அணிதிரண்டனர்.
இரவும் பகலுமாக அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு பக்கபலமாக இருந்த தொண்டர்களை ஒருங்கிணைத்து ஒரு குழுவாக நிலைபெறச்செய்தவர் அரவிந்த் கேஜ்ரிவால். இவர்தான் ஹசாரேவின் போராட்டத்திட்டங்களை செயல்படுத்துவதில் ஒரு மூளையாக செயல்பட்டவர். தொண்டு நிறுவனம் நடத்திவரும் அன்னா ஹசாரேவின் விசுவாசியான இவருக்கு மத்திய அரசு சமீபத்தில் வருமான வரித்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுவரை அவரை கண்டுகொள்ளாத வருமான வரித்துற உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பின் அவர் மீது குற்றம் கண்டுபிடித்து தண்டிக்க முயல்வதாகக் கூறப்படுகிறது. மத்திய அரசின் இந்த முயற்சி அரசு இன்னும் திருந்தவில்லை.  பழைய போக்கிலேயே அது பயணம் செய்வதாகத் தெரிகிறது. என அன்னா ஹசாரே கூறினர்.  மராட்டிய மாநிலம் புனே அருகில் தனது  சொந்த கிராமமான ராலேகான் சித்திக்கில் கிராம பஞ்சாய்த்து சபையில் முன்னால் அவர் பேசுகையில், மத்திய அரசு திருந்தியதைப் போல நடிக்கிறது. ஆனால் அது தனது பழைய பாதையில் தான் செல்கிறது. அக்கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும், அமைச்சர்களும் அறிவு ஜீவிகாளக இல்லை. குறிப்பாக உள்துறை அமைச்சர் சிதம்பரம் விஷமத்தானமானவர். அவரிடம் உண்மை கிடையாது. அவருடைய உத்தரவில்தான், தான் கைது செய்து சிறையில் வைக்கப்பட்டதாக டெல்லி போலீசாரே கூறினர். அரவிந்த் கெஜ்ரிவால் இந்த தேசத்திற்கு தேவையான நல்ல இளைஞர். அவரைப் போன்றவர்கள்தான் என குழுவில் உள்ளனர். அவருக்கு நோட்டீஸ் அளித்திருப்பதன் மூலம் மத்திய அரசு தனது வக்கிரபுத்தியை வெளிப்படுத்தியுள்ளது.  இது போன்ற செயல்கள் மூலம் என் குழுவினருக்கு கெடுதல் செய்ய நினைத்தால் நான் மீண்டும் பொங்கி எழுவேன். அரிஜன மக்களுக்கு நான் ஆதரவானவன் இல்லை என காங்கிரஸ் கூறிகின்றனர். அதில் உண்மையில்லை. அவர்களுக்காகவும் நான் போராடியுள்ளேன் என்றார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்