முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் மீது ஜெகன் மோகன் கட்சி கடும் குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 4 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

கடப்பா,செப்.- 4 - ஜெகன்மோகனுக்கு காங்கிரஸ் பல்வேறு இடையூறுகளையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்தி வருகிறது என்று ஜெகன்மோகன் கட்சி கடுமையாக குற்றஞ்சாட்டி உள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜெகன் மோகன் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கி உள்ளார். இந்த கட்சிக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. அதேசமயத்தில் ஜெகன்மோகன் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முறைகேடாக சொத்து குவித்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையொட்டி அவர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் ஜெகன் மோகன் தந்தையும் மறைந்த முதல்வருமான ராஜசேகர ரெட்டியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆந்திர காங்கிரஸ் எம்.எம்.எல்.ஏ.க்களில் 26 பேர் ராஜினாமா செய்துவிட்டார்கள்.
ஜெகன்மோகனுக்கு இப்படி காங்கிரஸ் அடிக்கடி இடையூறு செய்கிறது என்றும் அவர் அரசியலில் ஈடுபட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் ஜெகன்மோகனின் தாய் ஓய்.எஸ்.விஜயம்மா ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு தலைமை தாங்குவார் என்று முன்னாள் அமைச்சரும் ஜெகன்மோகன் ஆதரவாளருமான கொண்ட சுரேகா கூறியுள்ளார். ஜெகன்மோகனுக்கு ஆதரவாக செயல்பட்ட ஆந்திர காங்கிரஸ் தலைவர் போஸ்த சத்யநாராயணா தற்போது காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது. ராஜினாமா செய்துள்ள 26 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தால் ஜெகன்மோகன் ஆதரவாளர்கள் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார்கள் என்றும் சுரேகா மேலும் கூறினார்.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்