முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி சவுமித்ரா சென் ராஜினாமா

ஞாயிற்றுக்கிழமை, 4 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,செப்.- 4 - சர்ச்சைக்குள்ளான கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி சவுமித்ரா சென், நேற்று தனது ராஜினாமா கடிதத்தை எழுத்து மூலம் ஜனாதிபதியிடம் ஒப்படைத்தார். இதையடுத்து பாராளுமன்ற லோக்சபையில் நாளை அவருக்கு எதிரான கண்டன தீர்மான நடவடிக்கைகள் திட்டமிட்டபடி எடுத்துக் கொள்ளப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதியாக இருந்தவர் சவுமித்ரா சென். இவர் மீது ரூ. 33.23 லட்சம் சொத்து குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக கடந்த 1983 ம் ஆண்டு நடந்த வழக்கில் கொல்கத்தா கோர்ட்டில் நீதிபதி சவுமித்ரா சென் தவறான தகவல்களை அளித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து இவர் மீது பாராளுமன்ற ராஜ்ய சபையில் இவருக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ராஜ்யசபையில் கூண்டில் ஏற்றப்பட்ட இவர், அதற்கான விளக்கமளித்தார். ஆனால் அந்த விளக்கங்கள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இதையடுத்து இவர் மீதான கண்டன தீர்மானம் கடந்த ஆகஸ்ட் 18 ம் தேதி ராஜ்யசபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த கண்டன தீர்மானம் நாளை லோக்சபையிலும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ள நிலையில் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி சவுமித்ரா சென் நேற்று தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார். இவர் சார்பாக ஒரு வழக்கறிஞர் நேற்று காலை ஜனாதிபதியிடம் அந்த ராஜினாமா கடிதத்தை ஒப்படைத்ததாக ஜனாதிபதி மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மற்றபடி வேறு விளக்கங்கள் எதையும் அவர் கூறவில்லை. இந்த ராஜினாமா கடிதம் முறைப்படி இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அவ்வாறு முறைப்படி இருக்கும் பட்சத்தில் அது உடனடியாக அமலுக்கு வந்து விடும். இது குறித்து அட்டர்னி ஜெனரல் வாகன்வதி கூறுகையில், சவுமித்ரா சென் மீதான கண்டன தீர்மான நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்று தெரிவித்தார். சவுமித்ரா சென் அளித்த ராஜினாமா கடிதம் முறையாக இல்லாத பட்சத்தில் அது ஜனாதிபதியால் நிராகரிக்கப்படலாம். ஆனால் அட்டர்னி ஜெனரல் இதுபற்றி கூறுகையில் கண்டன தீர்மான நடவடிக்கைகளை நிறுத்தக் கூடாது. அப்படி செய்தால் அது தாமதத்திற்கு சமம். எனவே ஏற்கனவே தொடங்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர வேண்டும் என்று கருத்து தெரிவித்தார். ராஜ்யசபை நடவடிக்கை எடுப்பதற்கு முன்பே சவுமித்ரா சென் ராஜினாமா செய்திருக்க வேண்டும் என்றும் அட்டர்னி ஜெனரல் கருத்து தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago