முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்கள் புதிய கட்சி தொடங்குகிறார்கள்

ஞாயிற்றுக்கிழமை, 4 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

பெங்களூர், செப்.- 4 - கர்நாடகத்தில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்ததிலிருந்து ரெட்டி சகோதரர்களான ஜனார்த்தன ரெட்டி மற்றும் கருணாகரரெட்டி ஆகியோரால் நெருக்கடியை சந்தித்து வருகிறது. எடியூரப்பா மந்திரி சபையில் மந்திரி சபையில் மந்திரிகளான ரெட்டி சகோதரர்கள் இருவருக்கும் சொந்தமான ஒபுலாபுரம் மைனிங் கம்பெனி என்ற சுரங்க தொழிற்சாலை உள்ளது. அதில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் லோக் ஆயுக்தா விசாரணையில் இந்த முறைகேடுகளில் எடியூரப்பாவிற்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியதால் அவர் முதல்வர் பதவியில் இருந்து விலகினார். அவருக்கு பதில் சதானந்தகவுடா முதல்வரானார். ஆனால் அவரது மந்திரி சபையில் ரெட்டி சகோதரர்களுக்கு இடமில்லை. ரெட்டி சகோதரர்கள் ஆதரவாளர்களும் புறக்கணிக்கப்பட்டார்கள். எனவே ரெட்டி சகோதரர்கள் அவர்களுடைய ஆதரவர்களுடன் தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டனர். பெல்லாரி பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் புதிய கட்சியில் சேர முடிவு செய்துள்ளனர். இதனால் கர்நாடக பா.ஜ.க.வில் பிளவு ஏற்பட்டுள்ளது. சதானந்தா அரசுக்கும் அரசுக்கும் ஆபத்து உருவாக்கியுள்ளது. கர்நாடகாவில் மொத்த எம்.எல்ஏ.க்களின் எண்ணிக்கை 225, மெஜாரிடிக்கு 113 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்றாலும் ஸ்ரீராமுலுவின் புதிய கட்சியில் எத்தனை பேர் சேர்வார்கள் என்பது தெரியவில்லை. 10 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் விலகினால் அரசு கவிழும் நிலை ஏற்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்