முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பி.க்களை அவதூறாக பேசிய பிரசாந்த் பூஷணுக்கும் நோட்டீஸ்

ஞாயிற்றுக்கிழமை, 4 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, செப்.- 4 - எம்.பி.க்களை அவதூறாக பேசிய வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கும் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீசுக்கு வரும் 14-ம் தேதிக்குள் பதில் அளிக்கவும் கெடு விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி ராம்லீலா மைதானத்தில் அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருக்கும்போது அவரது குழுவில் உள்ள கிரண்பேடி, கேஜரிவால், பிரசாந்த் பூஷண் ஆகியோர் உரையாற்றினர். அப்போது கிரண்பேடி பேசுகையில் அரசியல்வாதிகள் பல்வேறு முகமூடிகளை அணிந்திருக்கிறார்கள் என்றார். பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் பேசுகையில் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றுவதற்கு எம்.பி.க்கள் பணம் வாங்குகிறார்கள் என்று குற்றஞ்சாட்டினார். இதற்கு பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் மட்டுமல்லாது அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் இந்த பேச்சு பாராளுமன்றத்தின் உரிமை மீரல் என்றும் கூறினர். இதனையொட்டி அவர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. முதலில் கிரண்பேடிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனையடுத்து வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சுப்ரீம்கோர்ட்டு நீதிபதியான இவர், பிரபல வழக்கறிஞர் சாந்தி பூஷணின் மகனாவார். நோட்டீசுக்கு வரும் 14-ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கேஜரிவாலுக்கும் விரைவில் வருமானவரித்துறையினர் நோட்டீஸ் அனுப்ப உள்ளனர். இவர் ரூ.9 லட்சம் வரை வரி கட்ட வேண்டியுள்ளது. அதனால் நாளை இவருக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்ப உள்ளனர். இவர் முதலில் வருவாய் துறையில் பணிபுரிந்தார். கடந்த 2006-ம் ஆண்டு ராஜினாமா செய்துவிட்டார். இவர் கட்ட வேண்டிய வரிபாக்கிய கட்டினால்தான் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள முடியும். இதற்கிடையில் தாம் ரூ.9 லட்சம் வரி கட்ட வேண்டியதில்லை என்றும் அரசியல் வற்புறுத்தலின் கீழ் வருமானவரித்துறை செயல்பட்டு வருகிறது என்றும் கேஜரிவால் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago