முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரையில் விநாயகர் ஊர்வலம்

ஞாயிற்றுக்கிழமை, 4 செப்டம்பர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை,செப்.- 4 - பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று மதுரையில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. கடந்த 1 ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மதுரையில் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகளை பொதுமக்கள் வைத்து பூஜை செய்தனர். இந்த சிலைகள் கடந்த 2 நாட்களாக ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டு வருகிறது. இந்து முன்னணி சார்பில் மதுரையில் நேற்று பிரமாண்ட விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. மதுரை கீழமாசிவிதியில் புறப்பட்ட ஊர்வலத்தை சுவாமி கமலானந்தர் துவக்கி வைத்து பேசினார். இதில் 100 கணக்கான விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டன. ஏராளமான இளைஞர்கள் உடல் முழுவதும் வண்ண தூள்களை பூசிக்கொண்டு ஓம் காளி, ஜெய்காளி என்று கோஷமிட்டு சென்றனர். ஊர்வலம் மாசிவீதிகள் வழியாக சென்று வைகை ஆற்றை அடைந்தது. அங்கு விநாயகர் சிலைகள் நீரில் கரைக்கப்பட்டன.
  இந்த விநாயகர் ஊர்வலத்திற்கு போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்