முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் இளைஞர்களுக்கு லஷ்கர்-இ-தொய்பா ஆயுத பயிறசி அமெரிக்கா தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 4 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,செப்.- 4 - பாகிஸ்தானில் உள்ள பயிற்சி முகாம்களில் இளைஞர்களை கடத்தி சென்று அவர்களுக்கு ஆயுத பயிற்சி (கமாண்டோ)யை லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் கொடுத்து வருகிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் ஏராளமான தீவரவாத பயிற்சி முகாம்கள் உள்ளன. இந்த பயிற்சி முகாம்களில் தீவிரவாத அமைப்புகள் இளைஞர்களை கடத்தி சென்று ஆயுத பயிற்சிகளை கொடுத்து வந்தன. கடந் பல மாதங்களுக்கு பாகிஸ்தானில் மறைந்திருந்த பின்லேடனை அமெரிக்க படைகள் சுட்டுக்கொன்ற பிறகு தீவிரவாதிகளுக்கு பயிற்சி கொடுப்பது நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் திரும்பவும் இளைஞர்களை கடத்திச்சென்று ஆயுத பயிற்சி கொடுத்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் குடியேறிய பாகிஸ்தானை சேர்ந்த ஜூபையர் அகமத் என்பவன் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்திற்கு உதவியது தெரியவந்தது. அவனை கைது செய்து அமெரிக்க புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கும் இளைஞர்களுக்கு ஆயுத பயிற்சி அளித்து வருவது தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணை வர்ஜீனியா கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சாட்சியத்தை கோர்ட்டில் அமெரிக்க புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்துள்ளது. சியால் காட்டில் பிறந்த அகமது 19 வயது வரை பாகிஸ்தானில் வாழ்ந்து வந்துள்ளான். இவன் பாகிஸ்தானில் இருக்கும்போது லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தில் பயிற்சி பெற்றிருக்கிறான். மேலும் அமெரிக்காவுக்கு அவன் வந்த பிறகு அந்த தீவிரவாத இயக்கத்தின் அறிவுரைப்படி நடந்துள்ளதும் தெரியவந்துள்ளது.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்