முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜ. ஆட்சியில் ஸ்பெக்டரம் முறைகேடுஇல்லை: ஜஸ்வந்த் சிங் பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 4 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, செப்.- 4 - பாரதீய ஜனதா ஆட்சியில் ஸ்பெக்ட்ரம் முறைகேடு நடக்கவில்லை என ஜஸ்வந்த் சிங் கூறினார். சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பின் கீழ் சி.பி.ஐ. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரித்து சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்து வருகிறது. கடந்த செப்.1ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்தது. அதில் முந்தைய பாரதீ ஜனதா ஆட்சியின் போதும் ஸ்பெக்ட்ரம் முறைகேடு நடந்து இருக்கிறது. இந்த முறைக்டு தொடர்பாக அப்போதைய நிதி அமைச்சர் ஜஸ்வந்த் சிங், தொலை தொடர்புத்துறை அமைச்சர் அருண் ஷோரி ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்த அருணஷோரி ஏற்கனவே தொடர்பாக சி.பி.ஐ. முன் ஆஜராகி விளக்கம் அளித்துவிட்டேன். இந்த ஒதுக்கீட்டில் முறைகேடு ஏதும் நடைபெறவில்லை என்பதை தெளிவுபடுத்தி விட்டதாக கூறிநார். இதேபோல் ஜஸ்வந்த் சிங்கும் மறுப்பு தெரிவித்துள்ளார். பாரதீய ஜனதா ஆட்சியில் நான் நிதியமைச்சராக இருந்த போது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. மேலும் இது தொடர்பாக சி.பி.ஐ. யிடமிருந்தோஅல்லது அரசிடமிருந்தோ என்னிடம் விசாரணை நடத்துவதற்கான எந்த தகவலும் வரவில்லை. சி.பி.ஐ. தனது கடமையை செய்வதை வரவேற்கிறேன்.விசாரணையை சந்திக்க தயாராக உள்ளேன். விசாரணை நடத்தினாலும் அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். இவ்வாறு ஜஸ்வந்த் சிங் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்