முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விலைவாசியை குறைக்க மத்திய அரசு முயற்சிக்கிறதாம்: பிரணாப்

திங்கட்கிழமை, 5 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

கொல்கத்தா,செப்.- 5 - விலைவாசியை குறைப்பதற்காக நாட்டில் வேளாண் உற்பத்தியை பெருக்க அரசு முயற்சித்து வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.  டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறும் போது, உணவுப் பொருள் பணவீக்க விகிதம் இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது கவலையளிக்கிறது. ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பண வீக்கம் அதிகரிப்பது வழக்கம்தான். ஆனால் ஒரு சில உணவுப் பொருட்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் உணவு பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியும். ஒட்டு மொத்த பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய ரிசர்வ் வங்கி பணக் கொள்கையில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பலனளித்து வருகின்றன. வரும் வாரங்களில் மேலும் சில புதிய யுக்திகள் கையாளப்படும். ரிசர்வ் வங்கி வரும் 16 ம் தேதி தனது பணக் கொள்கையை மறு ஆய்வு செய்யவுள்ளது. இதில் மீண்டும் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்படும் என்றே தெரிகிறது. கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவு கடந்த ஆகஸ்ட் 20 ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் உணவு பணவீக்க விகிதம் 10.05 சதவீதமாக உயர்ந்தது. உணவு பொருட்களின் விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.5 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்ததே உணவு பணவீக்கம் இரட்டை இலக்கத்தை எட்ட முக்கிய காரணம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்