முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாட்டில் இந்தியர்கள் தவறுசெய்தால் உள்நாட்டில் விசாரிக்கலாம்-சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு

திங்கட்கிழமை, 5 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, செப்.- 5 - வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அங்கு தவறு செய்தால் அவர்கள் மீது உள்நாட்டில் வழக்கு தொடரலாம். ஆனால் மத்திய அரசின் முன் அனுமதி இல்லாமல் விசாரணை நடத்த முடியாது என்று சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தொட்ட வெங்கடேஷ்வரலுக்கும் பர்வதரெட்டி சுனீதாவுக்கும் கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் 27-ம் தேதி இந்து சடங்குபடி இந்தியாவில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னர் இவர்கள் அமெரிக்காவில் உள்ள போட்ஸ்வானாவில் வசித்து வந்தனர். இந்த நிலையில் இந்தியாவுக்கு திரும்பிய சுனிதா தன் கணவர் மீது ஆந்திராவில் உள்ள பிரகாசம் மாவட்டத்தில் உள்ள  காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில் தன் கணவர் வெங்கடேஸ்வரலு மற்றும் அவரது உறவினர்கள், தம்மிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்தோடு துன்புறுத்தி வருவதாக புகார் செய்தார். அதன்பேரில் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்து பிரகாசம் மாவட்டத்தில் உள்ள அட்டங்கி கூடுதல் முனிஷிப் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதனையடுத்து வெங்கடேஸ்வரலுக்கு முனிசீப் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து ஆந்திர ஐகோர்ட்டில் வெங்கடேஸ்வரலு அப்பீல் செய்தார். அப்பீல் மனுவை ஏற்றுக்கொண்ட ஐகோர்ட்டு வெங்கடேஸ்வரலு கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொண்டது. ஆனால் அவரது உறவினர்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது.
ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் வெங்கடேஸ்வரலு அப்பீல் செய்தார். அதில், இந்தியராகிய நான் வெளிநாட்டில் வசிக்கிறேன். வெளிநாட்டில் வசிக்கும் என்னை உள்நாட்டில் விசாரிக்க கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை என்று கூறியிருந்தார். வெங்கடேஸ்வரலு அப்பீல் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட சுப்ரீம்கோர்ட்டு,இந்திய கிரிமினல் குற்றவியல் சட்டம் 188-ன் படி, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அங்கு தவறு செய்தால் அவர்கள் மீது இந்தியாவில் வழக்கு தொடரலாம். ஆனால் அந்த வழக்கை விசாரிப்பதற்கு முன்பு மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டும். நீங்கள் செய்துள்ள குற்றமானது இந்த சட்டப்பிரிவுக்கு உட்பட்டதுதான். அதனால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்யலாம். ஆனால் இந்த வழக்கை விசாரிப்பதற்கு முன்பு மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டும் என்று நீதிபதிகள் அல்சாமாஸ் கபீர், சிராக், எஸ்.எஸ்.நிஜ்ஜார் ஆகியோர் கொண்ட பெஞ்ச் தீர்ப்பு வழங்கியதோடு வெங்கடேஸ்வரலு அப்பீல் மனுவை தள்ளுபடி செய்துவிட்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்