முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் மக்களை அச்சுறுத்தும் டெங்குகாய்ச்சல் :மக்கள்அவதி

திங்கட்கிழமை, 5 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்,செப்.- 5 - பாகிஸ்தானில் கிழக்கு மாகாணமான பஞ்சாப் மாகாணத்தை டெங்கு காய்ச்சல் அச்சுறுத்தி வருகிறது. நாள்தோறும் பல்வேறு மருத்துவமனைகளில் குறைந்தபட்சம் 12 பேர் அனுமதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாகாண தலைநகர் லாகூரில் மட்டும் 145 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாபின் பல்வேறு நகரங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இந்தாண்டில் ஆயிரத்து 419 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஆயிரத்து 358 பேர் நோயில் இருந்து மீண்டுவிட்டார்கள். இருப்பினும் இந்த பிரச்சினையை சமாளிக்க உதவ தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி அறிவித்துள்ளார். டெங்கு காய்ச்சல் என்பது ஒரு வகை கொசுக்களால் ஏற்படுவது. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மழைகாலம் வரும்போது தேங்கியிருக்கும் தண்ணீரில் இந்த கொசுக்கள் உருவாகி வியாதியை பரப்புகின்றன. இந்த நோய் ஏற்பட்டால் அதிக அளவில் காய்ச்சல் கடுமையான உடல்வலி, அரிப்பு தன்மை, மூக்கு மற்றும் பல்லில் இருந்து ரத்தம் வருதல், கண்களில் கடும் வலி ஏற்படுதல் ஆகியவைகள் உண்டாகும். இந்த நோய் தற்போது பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தை பிடித்து ஆட்டுகிறது. பாவம் ஏழை மக்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்