முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசாரேவுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் சந்தேகமே!

திங்கட்கிழமை, 5 செப்டம்பர் 2011      ஊழல்
Image Unavailable

புது டெல்லி,செப்.- 5 - ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் போது ஹசாரேவுக்கு மத்திய அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேறுவது சந்தேகமே என்று யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார். கறுப்பு பணத்திற்கு எதிராக யாத்திரையை மேற்கொள்ளப் போகும் பாபா ராம்தேவ், செய்தியாளர்களிடம் கூறுகையில் இவ்வாறு தெரிவித்தார்.  உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் இருந்து வரும் 20 ம் தேதி 2 ம் கட்ட யாத்திரையை தொடங்கவுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஹசாரேவின் எந்த கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. பிரதமர், நீதித்துறை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், லோக்பால் சட்ட வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்று ஹசாரே போராட்டம் நடத்தினார். அரசு அவரது கோரிக்கையை ஏற்பதாக கூறிய போது போராட்டத்துக்கு 50 சதவீத வெற்றி கிடைத்ததாக ஹசாரே கூறினார். ஆனால் இது வெற்றியின் முதல் படிதான் என்பது எனது கருத்து. அதிகாரத்தில் உள்ளவர்களால் ஹசாரே வஞ்சிக்கப்பட்டுள்ளார். வலுவான லோக்பால் சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது என் விருப்பம். ஹசாரேவின் கோரிக்கைகள் நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. நல்ல முடிவுகள் வரும் என்று நம்புவோம். அன்னிய செலாவணி மோசடியில் நான் ஈடுபடவில்லை. எனக்கு அமலாக்கத் துறையிடம் இருந்து நோட்டீசும் வரவில்லை. வெளிநாட்டு பண பரிமாற்றம் தொடர்பாக எந்த விதியையும் நான் மீறவில்லை என்றார் பாபா ராம்தேவ்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்