முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹசாரேவால் பா.ஜ.க. வின் செல்வாக்கு அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 6 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

புதுடெல்லி, செப்.6 - அன்னாஹசாரே வின் 13 நாள் உண்ணாவிரதத்திற்கு பிறகு காங்கிரசின் செல்வாக்கு சரிந்துள்ளது. அதே சமயம் பா.ஜ.க வின் செல்வாக்கு அடுத்தத் தேர்தலில் வெற்றியடையும் அளவுக்கு உயர்ந்துள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது. சமீபத்தில் ஊழலுக்கு எதிராக 13 நாள் உண்ணாவிரதம் இருந்த ஹசாரேவை நாடே உற்றுக் கவனித்தது. கடந்த சில ஆண்டுகளாக அடுக்கடுக்காக நடந்து வந்த ஊழல்களை கண்டு மக்கள் கொதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் ஊழலுக்கு எதிராக அன்னாஹசாரே நடத்திய போராட்டம் மக்கள் அநைவரின் கவனத்தையும் ஒருநிலைப்படுத்தியது. உண்ணாவிரதத்திற்கு பிறகு நடந்த பிரமாண்ட ஊர்வலத்தில் மக்கள் லட்சக்கணக்கில் திரண்டனர். அதில் பெரும்பாலானோர் இளைஞர்களும், மாணவர்களுமாக இருந்தனர். இந்த நிலையில் ஸ்டார் செய்தி நிறுவனமும், நீல்சன் கணிப்பு நிறுவனமும் இணைந்து நாடு முழுவதும் 28 நகரங்களில் 9ஆயிரம் பேர்களிடம் கருத்தறிந்துள்ளனர். இந்த கருத்துக்கணிப்பு படி 32 சதவீதம் பேர் பா.ஜ.க. விற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரசுக்கு 20 சதவீதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். கிழக்கு மாநிலங்களில் கூட பா.ஜ.க. விற்கு ஆதரவு அதிகரித்துள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப், மராட்டியம், குஜராத் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. விற்கு 46 சதவீதமும், காங்கிரசுக்கு 15 சதவீதமும் ஆதரவு கிடைத்துள்ளது. ஆனால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க.விற்கு 16 சதவீதமும், காங்கிரசுக்கு 20 சதவீதமும் ஆதரவு தமரிவித்துள்ளனர். கருத்துக்கணிப்பில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு பெருமளவு மதிப்பு குறைந்துள்ளது. காந்தியவாதியான ஹசாரேவை காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசே கைது செய்ததை மக்கள் ஆதரிக்கவில்லை. சோனியாகாந்திக்கு நாட்டை வழிநடத்த சரிவரத்தெரியவில்லை என்பதையே இதுகாட்டுவதாக பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர். ராகுல் பிரதமர் ஆவதற்கு இது ஒன்று பொருத்தமான நேரமில்லை. நாடு முழுவதும் 18 வயது முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் அனைவரும் ராகுலைக் காட்டிலும் வயதான ஹசாரேயை மட்டுமே வழிகாட்டியாக கருதுகின்றனர் என்பது இக்கருத்துக்கணிப்பில் தெளிவாக தெரிகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்