முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிபதி சென் மீதான கண்டன தீர்மானம் நிறுத்தம்

செவ்வாய்க்கிழமை, 6 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி,செப்.6 - கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி சவ்மித்ரா சென் மீது லோக்சபையில் கண்டன தீர்மான நடவடிக்கை வாபஸ் பெறப்பட்டது. அவர் நீதிபதி பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதால் தீர்மான நடவடிக்கை திருப்பப்பெறப்பட்டது. கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்தவர் சவ்மித்ரா சென். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையொட்டி அவரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது வருமானம் குறித்து பொய்யான தகவல்களை கூறினார். ஐகோர்ட்டு நீதிபதியாக இருப்பவர் பொய் தகவல் கொடுக்கக்கூடாது. இது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. அதனால் அவர் மீது பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றும் நடவடிக்கைகள் மத்திய அரசு சார்பாக எடுக்கப்பட்டது. இதனையொட்டி ராஜ்யசபையில் சவ்மித்ரா சென்னுக்கு எதிராக கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட்டு விவாதத்திற்கு பின்னர் நிறைவேறியது. அதனையடுத்து லோக்சபையிலும் கண்டன தீர்மானம் கொண்டுவரப்பட இருந்தது. இந்தநிலையில் நீதிபதி சென், பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார். அவரது ராஜினாமாவையும் ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுவிட்டார். இதனையொட்டி லோக்சபையில் சென் மீது கண்டன தீர்மானம் கொண்டுவரலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து சபாநாயகர் மீராகுமார் நேற்றுக்காலையில், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் ஆகியோர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது சென் மீதான கண்டன தீர்மானத்தை நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டது. கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய மூத்த அமைச்சர் ஒருவர், நீதிபதி சென் ராஜினாமா செய்துவிட்டதால் கண்டன தீர்மானமானது பலனற்று போய்விட்டது என்றார். அந்த அமைச்சர் தனது பெயரை கூற விரும்பவில்லை. கூட்டத்திற்கு முன்னதாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த சபாநாயகர் மீரா குமாரிடம் இன்றைய(நேற்று) லோக்சபை நிகழ்ச்சிகளில் கண்டன தீர்மானம் இடம் பெற்றுள்ளதா என்று நிருபர்கள் கேட்டனர். நீதிபதி சென் ராஜினாமா செய்துள்ளதால் பிரச்சினையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால் அதுகுறித்து ஆலோசனை செய்ய வேண்டியுள்ளது என்றார். நீதிபதி சென் ராஜினாமா மத்திய அரசு கெஜட்டில் வெளியிடப்பட்டுவிட்டது. அரசியல் சட்ட தலைவர் (ஜனாதிபதி) எதையும் ஏற்றுக்கொண்டுவிட்டால் அதை கெஜட்டில் வெளியிட வேண்டிய அவசியம் இல்லை
தமிழ்நாட்டை சேர்ந்த நீதிபதி தினகரனும் நில அபகரிப்பு வழக்கில் சிக்கியதால் அவருக்கு சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி பதவி கிடைக்காமல் போய்விட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்