முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடாபிக்கு ஆயுதங்களை விற்பனை செய்தது சீனாவாம்!

புதன்கிழமை, 7 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

டொரண்டோ, செப்.7 - லிபிய நாட்டின் அதிபர் கடாபிக்கு ஆயுதங்களை விற்பனை செய்தது சீன நாடுதான் என்று தகவல்கள் இப்போது தெரியவந்துள்ளன. லிபிய நாட்டின் சர்வாதிகாரி என்று அழைக்கப்பட்டு வந்த கடாபியை எதிர்த்து அந்த நாட்டில் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடாபி அரசை எதிர்த்து புரட்சியாளர்கள் பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதையடுத்து லிபிய நாட்டை விட்டு வெளியேறி கடாபி தலைமறைவாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் லிபியாவில் இருந்தவரை கடாபிக்கு ஆயுதங்களை விற்பனை செய்து வந்தது சீனாதான் என்று தெரியவந்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் 20 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை கடாபிக்கு சீனாவை சேர்ந்த ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கி உள்ளன. ராக்கெட் லாஞ்சர்கள், ஏவுகணை தாக்குதல்களை தாங்கக் கூடிய வகையிலான நவீன ரக டாங்கர் வண்டிகள், நவீன ரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் போன்றவற்றை கடாபிக்கு சீனா வழங்கியுள்ளது என்று கனடாவில் இருந்து வெளியாகும் குளோப், மெயில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவுக்கும், லிபியாவுக்கும் இடையே நடந்த ஆயுத பேரங்கள் தொடர்பான ஆவணங்கள் லிபிய நாட்டின் தலைநகர் திரிபோலியில் உள்ள அரசு அலுவலகத்தில் கிடைத்ததாக அந்த பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டுடன் இது தொடர்பாக லிபிய அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பாகவும், அந்த ஆவணங்களில் தகவல் கிடைத்துள்ளதாகவும் அந்த பத்திரிக்கை தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து கிடைத்த ஆயுதங்களை கொண்டு புரட்சியாளர்களை ஒடுக்குவதற்கு கடாபி முயற்சி செய்தார் என்றும் தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்