முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி குண்டு வெடிப்பு: பார்லி. இரு சபைகளும் ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 8 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, செப்.8 - டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து நேற்று பாராளுமன்றத்தின் இரு சபைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பாராளுமன்றத்தின் ராஜ்ய சபை, லோக் சபை ஆகிய இரு சபைகளும் நேற்று காலை வழக்கம்போல் கூடின. லோக் சபையில் சபை நடவடிக்கைகள்  நடந்து கொண்டிருந்தபோது சபாநாயகர் மீரா குமார் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். டெல்லி ஐகோர்ட்டு அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் இது குறித்த தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன என்றும் எனவே சபையை ஒத்திவைப்பதாகவும் தெரிவித்தார்.

குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு லோக் சபை உறுப்பினர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

ராஜ்ய சபையில் சபை நடவடிக்கைகள் நடந்து கொண்டிருந்தபோது சபை தலைவர் ஹமீது அன்சாரி டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார்.

பிறகு சபையை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைத்தார். குண்டு வெடிப்பு சம்பவம் பற்றி தகவல்கள் வந்து கொண்டிருப்பதாகவும் சபை மீண்டும் கூடும்போது அது குறித்து தான் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

குண்டு வெடிப்பு சம்பவத்தால் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் நேற்று நடக்கவேண்டிய வழக்கமான அலுவல்கள் எதுவும் நடக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!