முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி குண்டு வெடிப்பு - சிதம்பரம் கண்டனம்

வியாழக்கிழமை, 8 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,செப்.8 - டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து லோக்சபாவில் அறிக்கை ஒன்றை வாசித்தார் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம். அப்போது அவர் கூறுகையில், டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு வெளியே 5 ம் எண் நுழைவு வாயிலில் குண்டு வெடித்துள்ளது. இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்துள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் தேசிய புலனாய்வு ஏஜன்சி, தேசிய பாதுகாப்பு படை மற்றும் போலீசார் முற்றுகையிட்டு தடயங்கள் மற்றும் ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர். விசாரணையும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஒரு தீவிரவாத தாக்குதல்தான். இதில் யார் ஈடுபட்டுள்ளனர் என்பதை இப்போது சொல்ல முடியாது. விசாரணைக்குப் பின்னர்தான் இது குறித்து தெரிய வரும். இது கடும் கண்டனத்துக்குரியது. நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துமாறு உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக் கொண்டுள்ளது என்றார் அவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago