முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் அருகே போலி உரக் கிடங்கிற்கு சீல்

சனிக்கிழமை, 10 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம்,செப்.10 - திருப்பரங்குன்றம் அருகே போலி உரக் கிடங்கிற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள உரப் பொடிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருப்பரங்குன்றம் அருகே உள்ள தனக்கன்குளம் 4 வழிச்சாலையில் உரப் பொடிகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி அதிவேகமாக சென்றது. அப்போது விவசாய பணிகளை முடித்து விட்டு அப்பகுதியில் திரும்பிய திருப்பரங்குன்றம் வேளாண்மை உதவி இயக்குனர் செல்வன், வேளாண் அலுவலர் உலகம்மாள், உதவி அலுவலர்கள் அழகேசன், பாண்டி ஆகியோர் அந்த லாரியை நிறுத்தி விசாரித்தனர். அப்போது லாரியில் இருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர்.  சிக்கியவர்களிடம் விசரித்தபோது அருகில் உள்ள குடோவுனில் இருந்து தஞ்சாவூருக்கு உரப்பொடி மூடைகளை எடுத்து செல்வதாக தெரிவித்தனர். அதிகாரிகள் லாரியுடன் அந்த உரப்பொடி குடோவுனுக்கு வந்து சோதனை செய்தனர். அப்போது அங்கு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் யூரியா (மூடை 1-க்கு 276)மூடைகளை வெளியில் இருந்து வாங்கி வந்து, அந்த யூரியாயுடன் அகரகர் மற்றும் கரித்தூள்களை சேர்த்து அதை குருனை தலை சத்து என்னும் போலி உரங்களை தயார் செய்து விற்பனை செய்வது தெரியவந்தது. 

இவ்வாறு தயாரிக்கப்படும போலி உரங்கள் ராஜா-100, லெட்சுமி-600 என்ற பெயரில் 50 கிலோ கொண்ட ஓரு மூடை ரூ.700-க்கு விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இத்தகவலை வேளாண்மை அதிகாரிகள் மதுரை கலெக்டர் சகாயத்திடம் தெரிவித்தனர். அவர் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெய்சிங் ஞானதுரை,  உர கட்டுப்பாட்டு உதவி இயக்குனர் சுருளிபொம்மு ஆகியோரை சம்பவ இடத்திற்கு அனுப்பிவைத்தார். அதிகாரிகள் அங்கிருந்த மூடைகளை சோதனை செய்தனர். விவசாயிகளுக்கு அரசு வழங்கும் மானிய விலை யூரியா மூடைகளும், ஜிப்சம் மூடைகளும், போலியாக தயாரிக்கப்பட்டு வைத்திருந்த 1000 போலி உரமூடைகள் இருப்பதை கண்டு பிடித்தனர்.  இவற்றின் மதிப்பு 5 லட்சம் ரூபாயாகும். இந்த போலி உரக்கிடங்கை நடத்துபவர் அனந்தப்பன். இவர் பி.எஸ்.சி. கெமிஸ்ட்ரி படித்துள்ளார். யூரியாவில் கலப்படம் செய்து போலி உரத்தை கடந்த ஓராண்டுக்கு மேலாக தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார். யூரியா விற்பனைக்கான லைசென்ஸ் மற்றும் அரசு ஆவணங்கள் எதுவுமின்றி அரசின் அனுமதி இல்லாமல் போலியான உரக்கிடங்கை நடத்தி வந்துள்ள இவர் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்