முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நில மோசடி: நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர் கைது

ஞாயிற்றுக்கிழமை, 11 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை செப்-11 - போலி ஆவணங்கள் மூலம் விவசாயி நிலத்தை அபகரித்த நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர் கருப்பசாமி பாண்டியன் அவரது சகோதரர் சங்கரசுப்பு ஆகிய இருவரையும் நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலிசார் நேற்று அதிகாலை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது குடும்பத்தினர் 3பேரை போலீசார் தேடிவருகின்றனர். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகேயுள்ள நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் சிவசுப்பு. இவரது மகன் கொம்பையா. இவருக்கு சொந்தமான நிலம் 5 ஏக்கர் 59 செண்ட்நிலம்(சர்வே எண்:35/1) அப்பகுதியில் உள்ளது. அந்த நிலத்தை கடந்த 2008ம் ஆண்டு தி.மு.க. மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியனின் சகோதரர் சங்கரசுப்பு(67), அவரது மகன் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பரமசிவ ஐயப்பன் ஆகிய இருவரும் போலி ஆவணங்கள் மூலம்  சங்கரசுப்புவின் மகள் சுந்தரி மற்றும் அவரது உறவினர் கல்லத்தியான் ஆகியோர் பெயருக்கு மாற்றம் செய்துள்ளனர். இதற்கு மாவட்ட 

செயலாளர் கருப்பசாமி பாண்டியனும் உடந்தையாக இருந்துள்ளார். இது குறித்து தகவலறிந்த 

கொம்பையா அந்த நிலம் தனக்கு சொந்தமானது என்றும், அதற்கான ஒரிஜினல் ஆவணங்கள் தன்னிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் கருப்பசாமி பாண்டியன், சங்கரசுப்பு,  பரமசிவ ஐயப்பன், மற்றும் சுந்தரி, கல்லத்தியான் ஆகியோர் கொம்பையாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து கொம்பையா நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் நேற்று புகார் 

செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் நெல்லை சரக டி.ஐ.ஜி. வரதராஜூ அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய உத்தரவிட்டார். அவர்கள் மீது 465, 467, 468,(போலி ஆவணங்கள் மூலம் மோசடி) மற்றும் 120(பி)(கூட்டு சதி), 506(2) (கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்களை கைது செய்ய மாவட்ட குற்றப்பிவு 

ஏ.டி.எஸ்.பி. சொக்கலிங்கம் மேற்பார்வையில், தென்காசி டி.எஸ்.பி. பாண்டியராஜன் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இத்தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை  5.10 

மணிக்கு கருப்பசாமி பாண்டியன், அவரது சகோதரர் ஆகிய இருவரையும் திருத்துவில் உள்ள 

அவர்களது வீட்டில் வைத்து கைது செய்தனர்.  பின்னர் அவர்கள் இருவரும் பாளை தாலுகா காவல் நிலையத்திகு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் அவர்களிடம் ஏ.டி.எஸ்.பி.சொக்கலிங்கம் விசாரணை நடத்தினார். விசாரணையை தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் மருத்துவர்கள் குழு ஒன்று பரிசோதனை செய்தது. பின்னர் அவர்கள் இருவரும் நெல்லை ஜே.எம்.4 மாஜிஸ்திரேட் பாலபாண்டி வீட்டில் ஆஜர் படுத்தினர். மாஜிஸ்திரேட் அவர்கள் இருவரையும் வருகிற 23ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து கருப்பசாமி பாண்டியன் மதுரை சிறையிலும், அவரது சகோதரர் சங்கரசுப்பு பாளை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக உள்ள 

மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago