முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை செல்கிறார் சுஷ்மா சுவராஜ்

ஞாயிற்றுக்கிழமை, 11 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

புது டெல்லி,செப்.11  - இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை குறித்து நேரில் கண்டறிய நாடாளுமன்றத்தின் அனைத்து கட்சி தலைவர்கள் கொண்ட குழுவுக்கு தலைமையேற்று விரைவில் இலங்கை செல்லவிருப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார். அனைத்து கட்சி தலைவர்கள் கொண்ட குழுவை இலங்கைக்கு அனுப்புவது தொடர்பாக மத்திய அரசின் வெளியுறவு துறை அமைச்சகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து கட்சி தலைவர்கள் அடங்கிய குழு விரைவில் இலங்கை செல்லும் என்று தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நிறைவடைந்ததையொட்டி அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், மாநிலங்களை எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜெட்லி ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்