முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ கான்பரன்சிங் முலம் காரிமங்கலம் எம்.ஜி.ஆர்.சிலையை ஜெயலலிதா திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 12 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை செப்.13 அ.தி.மு.க. பொதுச் செயலாளரும்,  தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா நேற்று காலை 12 ம்தேதி ​ திங்கட் கிழமை, சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழகத்திற்கு வருகை தந்து, தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேருந்து நிலையம் அருகில் நிறுவப்பட்டுள்ள  அ.தி.மு.க. நிறுவனத் தலைவர் `பாரத் ரத்னா' புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின்  வெங்கல திருவுருவச் சிலையை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியின் தொடக்கமாக, கொள்கை பரப்புச் செயலாளர் டாக்டர் மு. தம்பிதுரை, எம்.பி.,  வரவேற்புரையாற்றினார்.  தொடர்ந்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா, கட்சியின் சார்பாக, தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேருந்து நிலையம் அருகே நிறுவப்பட்டுள்ள புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆருடைய முழு உருவ வெண்கல சிலையை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்து, எழுச்சி மிகு உரை நிகழ்த்தினார்கள். நிறைவாக, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்  அ. தமிழ்மகன் உசேன்  நன்றியுரை ஆற்றினார்.

மேலும், டாக்டர் எம்.ஜி.ஆருடைய திருவுருவச் சிலையை திறந்து வைத்தவுடன், ஜெயலலிதாவுக்கு, காரிமங்கலத்தில் இருந்து தருமபுரி மாவட்டக் கழகச் செயலாளர் கே.பி. அன்பழகன், எம்.எல்.ஏவும்., காரிமங்கலம் ஒன்றியக் குழு உறுப்பினர்  சாந்தியும் நன்றி தெரிவித்து பேசினர்.  அ.தி.மு.க.பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவை வரவேற்கும் விதமாக, சாலையின் இரு மருங்கிலும் கட்சி கொடித் தோரணங்களும், வரவேற்புப் பதாகைகளும், அழகுற அமைக்கப்பட்டு, கட்சியினர்  ஆங்காங்கே சாலையின் இரு புறமும் திரண்டிருந்து, வாழ்த்தொலி முழங்க எழுச்சி மிகு வரவேற்பு அளித்தனர். முன்னதாக தலைமை கழகத்திற்கு வருகை தந்த முதல்வர் ஜெயலலிதாவை அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன், பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன். அமைச்சர்கள  பி.பழனியப்பன், ஜெயலலிதா பேரவை மாநில செயலாளர் டி.ஆர்.அன்பழகன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்த வரவேற்றனர். இந்த சிலை திறப்பு விழாவில்  கட்சி நிர்வாகிகள் பொன்னையன், சுலோசனாசம்பத், அமைப்புச்சாரா ஓட்டுனர் அணி செயலாளர் கமலக் கண்ணன், தளவாய் சுந்தரம், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன்,கே.பி. முனுசாமி,  சண்முகவேலு,  அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ, கோகுல இந்திரா,  செல்விராமஜெயம், எஸ்.பி.வேலுமணி, கே.வி. ராமலிங்கம், டி.கே.எம்.சின்னையா,  தங்கமணி. செந்தமிழன்,விஜய், செந்தில் பாலாஜி, சுப்பிரமணி, ஜெயபால், முகமது ஜான், உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

தென்னைசென்னை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வி.பி.கலைராஜன், வடசென்னை  வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்  வெற்றிவேல், எம்.எல்.ஏ.க்கள் பா.வளர்மதி, வாலாஜாபாத்கணேசன், இளைஞர் பாசாறை மாநில செயலாளர் செந்தில்நாதன், மகளிர்அணி மாவட்ட செயலாளர் சரஸ்வதி ரங்கசாமி, எம்.ஏ.மூர்த்தி, இஸ்மாயில்கனி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், தலைமை நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், நிர்வாகிகளும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கட்சியின் சார்பு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கட்சி உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளாக வருகை தந்து சிறப்பித்தனர்.  அதே போல், காரிமங்கலம் பேருந்து நிலையம் அருகில் நிறுவப்பட்டுள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருடைய திருவுருவச் சிலை அருகே தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் பெருமளவில் திரண்டிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்