முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் ரவுடி கிடையாது பெருமாளின் பக்தன் கதறிய பொட்டுசுரேஷ்

வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,செப்.- 16 - கொலை வழக்கில் கைதாகி குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ள பொட்டு சுரேஷ் போலீஸ் விசாரணையின் போது, நான் ரவுடி கிடையாது. பெருமாளின் பக்தன் என்று கதறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.கடந்த திமுக ஆட்சியின் போது, திமுகவினர் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டனர். கொலை, மோசடி, நில அபகரிப்பு, ரவுடியிசம் என அனைத்து சமூக விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் அப்போது புகார் கொடுத்த போது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த செயல்களுக்கு திமுகவின் முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களும் உடந்தையாக இருந்தனர். பின்பு அதிமுக ஆட்சிக்கு வந்ததும். இந்த புகார்கள் மீது தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக நில அபகரிப்பு தொடர்பாக தனி பிரிவு ஒன்றை தொடங்கி அதில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்கலாம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதில் திமுகவின் முக்கிய தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களுமான வீரபாண்டி ஆறுமுகம், பொன்முடி, கே.என்.நேரு, மாவட்ட செயலாளர்கள் தளபதி, மண்டல தலைவர்கள் வி.கே.குருசாமி, இசக்கி முத்து, மத்திய அமைச்சரின் நெருங்கிய நண்பரான பொட்டுசுரேஷ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பருமான பொட்டு சுரேஷ் கடந்த திமுக ஆட்சியின் போது அதிகார கிட்டங்கியாக விளங்கினார். மாவட்ட கலெக்டர், போலீஸ்கமிஷனர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் இவரது ஆலோசனையின் பேரிலேயே செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் பலபேர் முன்னிலையிலேயே அதிகாரிகளை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்து விடும். நாம் எப்போதும் போல் கொடி கட்டி பறக்கலாம் என்று நினைத்து கொண்டிருந்த பொட்டு சுரேசுக்கு அதிமுக ஆட்சிக்கு வந்ததுமே ஆபத்தும் வந்து விட்டது. முதலில் நில அபகரிப்பு வழக்கில் கைதான பொட்டு சுரேஷ் மதுரைஅவனியாபுரத்தில் ஆட்டோ டிரைவர் ஒருவர் கொலை வழக்கிலும் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இதை தொடர்ந்து போலீசார் பொட்டு சுரேசை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    விசாரணையின் போலீசாரிடம் தான் ஒரு ரவுடியே கிடையாது. மு.க.அழகிரியின் அலுவலக உதவியாளராகவே இருந்தேன். மேலும் நான் பெருமாளின் தீவிர பக்தன். நான் ஏராளமான கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி வைத்துள்ளேன். நானா கொலை செய்வேன் என்று கதறி அழுததாக தற்போது தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்