முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ தலைமையில் மதுரையில் அண்ணாசிலைக்கு மாலைஅணிவிப்பு

வெள்ளிக்கிழமை, 16 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

மதுரை,செப்.- 16 - பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி மதுரையில் உள்ள அவரது சிலைக்கு ஏ.கே.போஸ் எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.  மறைந்த தலைவர் பேரறிஞர் அண்ணாவின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மதுரை நெல்பேட்டையில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட கழக செயலாளர் ஏ.கே.போஸ் எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அவைத்தலைவர் புதூர் துரைப்பாண்டி, பொருளாளர் வில்லாபுரம் ஜெ.ராஜா, முன்னாள் எம்பிக்கள் வி.வி.ராஜன்செல்லப்பா, எஸ்.முத்துமணி, மாமன்ற அதிமுக குழு தலைவர் பெ.சாலைமுத்து, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற மாநில துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஜெயபாலன், துணை செயலாளர் கே.ஆர்.மோதிலால், மாணவரணி செயலாளர் ஏ.ராஜீவ்காந்தி, மகளிரணி செயலாளர் பெ.இந்திராணி, மாவட்ட துணை செயலாளர் சி.தங்கம், இளைஞரணி செயலாளர் ஷ.ராஜலிங்கம், பாசறை செயலாளர் டி.வினோத்குமார், தொகுதி செயலாளர்கள் எஸ்.குமார், எஸ்.முருகேசன், எம்.ரவிச்சந்திரன், ரவீந்திரன், எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் வி.கே.சாமி, பகுதி கழக செயலாளர்கள் எம்.என்.முருகன், கே.ஜெயவேல், பூமிபாலகன், பி.எஸ்.கண்ணன், வடக்கு பகுதி எம்ஜிஆர் மன்ற செயலாளர் கே.கே.நகர் மணி, வடக்கு தொகுதி இணை செயலாளர் ஏ.பி.பாலசுப்பிரமணி, இளைஞரணி பகுதி செயலாளர் ஆட்டோ விஜயன், முன்னாள் பேரவை இணை செயலாளர் எம்.என்.கோவிந்தன், இளைஞரணி துணை செயலாளர் பரமேஸ்வரன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் அமாவாசை, பரவை ராஜா, விளாங்குடி கு.திரவியம், கவுன்சிலர் ராஜா என்ற சீனிவாசன் மற்றும் கேசவ பாண்டியம்மாள், குமுதா, செல்வி, புதூர் பாப்பா, வட்ட செயலாளர்கள் கார்னர் பாஸ்கர், ஏ.காஜா, வீரணன், எம்.தேவதாஸ், கே.எம்.கண்ணன், எஸ்.போஸ், ஏ.முத்துசாமி, கே.வி.கே.கண்ணன், மத்திய பகுதி பேரவை செயலாளர் பால்பாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
   திமுக சார்பில் மதுரை மாநகர் மாவட்டசெயலாளர் கோ.தளபதி தலைமையில் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தேமுதிக சார்பில் மாவட்ட தலைவர் அரவிந்தன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago