முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இராயபுரம் தொகுதி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஜெயக்குமார் வழங்கினார்

சனிக்கிழமை, 17 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.செப்.- 17 - இராயபுரம் சட்டமன்ற தொகுதியில் லோட்டஸ் இராமசாமி தெருவில் நேற்று நடைப்பெற்ற  விழாவில்  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா  அறிவித்த சிறப்பு திட்டத்தின் கீழ்  இல்லத்தரசிகளுக்கு மின் விசிறி, மிக்சி, கிரைண்டர் மற்றும்  மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகளை   தொகுதி எம்.எல்.ஏ.வும்,சட்டப்பேரவைத் தலைவர் டி.ஜெயக்குமார்  வழங்கி சிறப்புறையாற்றினார்.    பின்னர் சட்டப்பேரவைத் தலைவர்  டி.ஜெயக்குமார்  அப்போது பேசியதாவது:  ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்பதை உணர்ந்த பேரறிஞர் அண்ணா தனது ஆட்சிக்காலத்தில் பல்வேறு திட்டங்களை தமிழக மக்களுக்கு வழங்கினார்.   அதனைத் தொடர்ந்து எம்.ஜி.ஆரும் பல்வேறு திட்டங்களை 10 ஆண்டுக்கால பொற்கால ஆட்சிக் காலத்தில் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தமிழக மக்களின் நல்வாழ்வுக்கு இன்றைக்கும், என்றைக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் வகையில் கிராமப்புற, நகர்ப்புற இல்லத்தரசிகளுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி போன்றவற்றையும், மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகளும் வழங்க உத்தரவிட்டு,  சென்னையில் முதல் தொகுதியாக இராயபுரம் சட்டமன்ற தொகுதியில் செயலாக்கம் செய்த  தமிழக முதலமைச்சருக்கு இத்தொகுதி மக்கள் சார்பில் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் 1859 இல்லத்தரசிகளுக்கு ரூபாய் ஒரு கோடியே, ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 987 மதிப்பீட்டில் மின் விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்கப்பட்டது.  ஒவ்வொரு இல்லத்தரசிகளுக்கும் வழங்கப்படும் இலவச பொருட்களின் மொத்த மதிப்பு ரூபாய் 5,443.78/-​ ஆகும்.  இதன் முதல் கட்டமாக நேற்று  இராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 720 இல்லத்தரசிகளுக்கு ரூபாய் 39.19 இலட்சம் மதிப்பீட்டில் மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் நேற்று வழங்கப்பட்டது. மேலும்,  தமிழக முதலமைச்சர்  அறிவித்த சிறப்பு திட்டத்தின் கீழ் அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள், கலைக்கல்லுரிகள், தொழில் நுட்ப கல்லுரிகளில் பயிலும்  பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது.  

அதன் தொடர்ச்சியாக சென்னை மாவட்டத்தில் இராயபுரம் தொகுதிக்குட்பட்ட சென்னை பள்ளியில் 12​ஆம் வகுப்பில் பயிலும்  42 மாணவ, மாணவியர்களுக்கு  மொத்தம்   ரூபாய் 5 இலட்சத்து, 91 ஆயிரம் மதிப்பீட்டில் மடிக்கணினிகள் வழங்கப்பட்டது என்றார்.  

மேலும் தெரிவிக்கும்போது, 14-வது  சட்டமன்றத் தொடரில் சமூக நலன், ஆதிதிராவிடர் நலன், மீனவர் நலன், தொழிலாளர் நலன், நெசவாளர் நலன் போன்ற அனைத்து தரப்பு மக்களையும் கருத்தில் கொண்டு ரூபாய் ஒரு லட்சம் கோடி  மதிப்பீட்டில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.   இந்த ஆண்டு தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் 25 இலட்சம் குடும்பங்களுக்கு சிறப்பு திட்டங்கள் கிடைக்கும் வகையில் ரூபாய் 1250 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.   இதைப் போல் மடிக்கணினி 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவியர்கள் 9.12 இலட்சம் பேர் பயன்பெறும் வகையில் ரூபாய் 912 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார்.    

சென்னை, அண்ணாசாலையில் புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ்  மருத்துவமனையைப் போன்று பல்வகை சிறப்பு மருத்துவமனை அமைய உள்ளதால் வடசென்னை மக்கள் பயன்பெறுவார்கள்.         

சிறப்பு திட்டங்கள் மூலம் வழங்கப்பட்ட பொருட்களை இல்லத்தரசிகள் வெகுவாக பயன்படுத்த வேண்டும் என்கிற வகையிலும், மற்றவர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதற்காக  பொருட்களில் ரகசிய குறியீடு பொருத்தப்பட்டுள்ளது.  எனவே, பொதுமக்கள் வழங்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் தங்களுடைய உபயோகத்திற்கு நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  தமிழகத்தில் கல்வி புரட்சி, பொருளாதார புரட்சி, இல்லத்தரசிகளின் நலனைக் கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட திட்டங்கள் மூலம் உங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ள வேண்டும், என்றார்.

சென்னை மாநகராட்சி, ஆணையர் பேசுகையில், தமிழக முதல்வர்  இராயபுரம் தொகுதிக்கு சிறப்பு திட்டங்கள் வழங்க வேண்டும் என உத்தரவிட்ட உடன், வழங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டது. கிராமப்புறத்தில் உள்ள ஏழை, எளிய பெண்கள் சமையல் பொருட்களை அரைப்பதற்கு வசதியில்லாமல் பக்கத்து வீட்டில் கடன் கேட்டு அரைப்பார்கள். இன்றைக்கு மகளிர்களுக்கு சுயமரியாதை கூட்டும் வகையில் முதல்வர்  சிறப்பு திட்டங்களின் கீழ் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி மற்றும் மாணவ, மாணவியர்கள் ஏற்றம் பெற மடிக்கணினி வழங்கப்படுகிறது என்றார். 

இவ்விழாவில் இணை ஆணையர் ( கல்வி ) தி.ந.வெங்கடேஷ், நா.பாலகங்கா, எம். பி. பி. வெற்றிவேல், எம்.எல்.ஏ., மன்ற உறுப்பினர் ச.மீனா,  மண்டல அலுவலர் nullமிநாதன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதா  அறிவித்த இல்லத்தரசிகளுக்கு மின் விசிறி, மிக்சி, கிரைண்டர், மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் சட்டப் பேரவைத் தலைவர் டி. ஜெயக்குமார் இயராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு நேற்று ( 16.9.2011) வழங்கினார். இந்நிகழ்ச்சியில்  சென்னை மாநகராட்சி ஆணையாளர் முனைவர் தா. கார்த்திகேயன், இணை ஆணையர் ( கல்வி )தி.ந.வெங்கடேஷ்,  நா. பாலகங்கா, எம்.பி. பி.வெற்றிவேல், எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்