முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.சார்பில் சேலம் மேயர் வேட்பாளராக எஸ்.சவுண்டப்பன் அறிவிப்பு

சனிக்கிழமை, 17 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சேலம் செப்.- 17 - சேலம் மாநகராட்சி அ.தி.மு.க.வேட்பாளராக  முன்னாள் துணை மேயர் எஸ்.சவுண்டப்பன் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிக்கும் மேயர் வேட்பாளர்களை அ.தி.மு.க.பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா நேற்று அறிவித்தார். இதில் சேலம் மேயர் வேட்பாளராக முன்னாள் துணை மேயர் சவுண்டப்பன் அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னாள் துணை மேயர் சவுண்டப்பன்  இந்து கன்னட தேவாங்க செட்டியார் இனத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை பெயர் எம்.சுப்பரமணி செட்டியார்.65 வயதாகும் இவர் எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளார். 1972 ஆம் ஆண்டு அ.தி.மு.க.தொடங்கப்பட்ட நாள் முதல் கட்சியில் இருந்து வருகிறார். அ.தி.மு.க.வில் சேலம் மாநகர் மாவட்ட துணைத் தலைவராக இருந்துள்ளார். தற்போது 57 வது டிவிசன் கழக பிரதிநிதியாகவும், தெற்கு சட்டமன்ற தொகுதி இணைச் செயலாளராகவும் உள்ளார். 1996-2006 வரை 57 வது கோட்ட கவுன்சிலராகவும், 1996-2001 வரை மாநகராட்சி கொறடாவாகவும்,  2001-2006 வரை துணை மேயராகவும், 2006 ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை பொறுப்பு மேயராகவும் பதவி வகித்தார். 1985 முதல் 1990 வரை அறிஞர் அண்ணா கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவராக பணியாற்றிள்ளார். நாடக நடிகரான இவர் சேலம் மாவட்ட நாடக நடிகர் சங்கத்தின் செயலாளராக கடந்த 15 வருடங்களாக இருந்து வருகிறார். 1996,1999 ம் ஆண்டிற்கான தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் நிர்வாகத் தேர்தலில் நாடகத் துறையின் சார்பில் போட்டியிட்டு வெற்றி அ.தி.மு.க.நிர்வாகி இவர் ஒருவர் மட்டுமே. கடந்த 2001-2006 ல் துணை மேயராக பதவி வகித்தபோதும் நாடகங்களில் தோன்றி நடித்துள்ளார்.

1972 முதல் அ.தி.மு.க.சார்பில் அ.தி.மு.க.சார்பில் நடத்தப்பட்ட அனைத்து போராட்டங்களிலும் பங்கு கொண்டுள்ளார்.

மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.சவுண்டப்பன் நிருபர்களிடம் கூறியதாவது.மேயர் வேட்பாளராக என்னை அ.தி.மு.க.பொதுச்செயலாளர் புரட்சி தலைவி அறிவித்துள்ளார். நான் இதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை.மேயர் பதவிக்கு விருப்பமனுவை அ.தி.மு.க.நிர்வாகி என்பதால் தாக்கல் செய்தேன்.தற்போது என்னை மேயர் பதவிக்கு போட்டியிட அவர் வாய்ப்பளித்துள்ளார். இதற்கு முன்பு எனக்கு துணை மேயர் பதவி வாய்ப்பு கொடுத்துள்ளார். இதை என் உயிர் உள்ளவரை மறக்க மாட்டேன்.சாதாரன நாடக நடிகரான எனக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நான் மேயராக வெற்றி பெற்றவுடன் இதன் மூலம் மாநகராட்சி மக்களுக்கும், நாடக நடிகர்களும், தேவையான எல்லா உதவிகளையும் செய்வேன். எல்லா பணிகளுக்கு மக்கள் திருப்தி படும் வகையில் நிர்வாகிகள், அதிகாரிகள் , பொதுமக்கள் ஒத்துழைப்புடன் செய்து கொடுத்து அ.தி.மு.க.விற்கு பெருமை சேர்ப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சவுண்டப்பனுக்கு அ.தி.மு.க.நிர்வாகிகளும், நாடக நடிகர்களும் நேரில் சென்று வாழ்த்து கூறினர்.

 

  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்