முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வார்டுகளை பிரிக்க கோரும் வழக்கு மாநில தேர்தல் ஆணையர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சனிக்கிழமை, 17 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, செப்.- 17 - 2011 மக்கள் தொகை அடிப்படையில் சென்னை மாநகராட்சி தேர்லுக்கான வார்டுகளை பிரிக்கவேண்டும் என்று தொடரப்பட்ட பொதுநல வழக்கில் மாநில தேர்தல் ஆணையர் பதலளிக்க கோர்ட் உத்தவிட்டுள்ளது. சென்னை மந்தவெளிபாக்கத்தை சேர்ந்த கணேசன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில்  பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில் கூறியுள்ளதாவது:- நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சார்பில் 19.2.2011 யன்று அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையானது தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் மற்றும் சென்னை மாநகராட்சி சட்டத்திற்கு எதிரானதாகும் ஏனென்றால். வார்டுகளை வரையரை 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் வார்ட்டுகள் வரையறை செய்யப்பட்டுள்ளது. இது தவறு 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் வார்ட்டுகளை வரையரை செய்யப்பட்டிருக்க வேண்டும். அல்லது சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்தலின் வாக்காளர் செய்யப்பட்டிருக்க வேண்டும். அல்லது சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்தலின் வாக்களார் பட்டியலின் அடிப்படையில் வார்டுகள் வரையரை செய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை. மேலும் பெண்களுக்கான தனி வார்டு வரையரை பெண்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் இறங்குமுகத்தின் அடிப்படையில் மூன்றில் ஒரு பகுதி தொகுதிகளை ஒதுக்கியிருக்கவேண்டும். பெண்களுக்கான வார்டுகள் அவ்வாறு ஒதுக்கப்படவில்லை.
மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி முழுவதும் பெண்களுக்கான வார்டாக ஒதுக்கப்பட்டுள்ளது. இது சென்னை மாநகராட்சி தேர்தல் விதிகளுக்கு எதிரானதாகும். எனவே சென்னை மாநகராட்சி வார்டு வரையறை குறித்த அரசாணை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு என்று கொண்ட தலைமை நீதிபதி இக்பால் மற்றும் சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதன்மை பென்சு விசாரிதது மனுதாரர் சார்பில் வக்கீல் மயிலை சத்யா ஆஜராகி வாதித்தார்.
இதை அடுத்து மனு குறித்து 2 வாரத்தில் பதில் அளிக்கும்படி நகராட்சி நிர்வாகம் மற்றும்  குடிநீர் வடிகால் துறை செயலாளர் சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் மாநில தேர்தல் ஆணையாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்