முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி மலைக்கோயிலை தரம் உயர்த்த வேண்டும்-வேணுகோபால் பேச்சு

சனிக்கிழமை, 17 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

பழனி,செப்.- 17 - பழனி முருகன் மலைக் கோவிலை சிறப்பு நிலை கோவிலாக தரம் உயர்த்த வேண்டும் என்று தமிழக சட்டசபையில் கே.எஸ்.என். வேணுகோபால் எம்.எல்.ஏ பேசினார்.  வரலாற்று சிறப்பு மிக்க இந்த சட்டசபையில் என்னை உறுப்பினராக்கிய முதல்வருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பழனி முருகன் மலைக் கோவில் தற்போது முதுநிலை திருக்கோயிலாக உள்ளது. அதை முதல்வர் தரம் உயர்த்தி சிறப்பு நிலை கோயிலாக மாற்ற வேண்டும். கொடைக்கானல், பூம்பாறை குழந்தை வேலாயுதசாமி கோவில், பழனி திருஆவினன்குடி முருகன் கோவில், பழனி பெரியநாயகி அம்மன் கோவில் ஆகிய கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்.
பழனி கொடைக்கானல் சாலையில் அடிக்கடி மண்சரிவு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் என அனைவரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். கொடைக்கானலுக்கு மாற்றுப் பாதையாக பழனி பைபாஸ் ரோட்டில் இருந்து அஞ்சுஊரான்மந்தை வழியாக பூம்பாறை வழியே 32 கி.மீ. தொலைவில் புதிய சாலை அமைக்க வேண்டும். கொடைக்கானலில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க கொடைக்கானல் குண்டார் அணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பழனி வலப்பட்டி அருகே விவசாயிகளின் நலன் கருதி பச்சையாறு அணை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பழனி திருஆவினன்குடி முருகன் கோவிலிலும் அன்னதான திட்டத்தை விரிவுபடுத்துமாறு வேண்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்