முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வில் வேட்பு மனு விண்ணப்பித்தவர்கள் விவரம் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 18 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, செப்.- 13 -   தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் - 2011 ல் போட்டியிட விரும்பி அ.தி.மு.க.வில் வேட்பு மனுக்கள்  விண்ணப்பித்தவர்கள்  ப்ற்றிய விவரங்களை கட்சியின் பொருளாரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டார். இதுகுறித்து அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும்,முதல்வருமான ஜெயலலிதாவின் ஒப்புதலோடு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, நடைபெற்வுள்ள தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற கட்சி உடன்பிறப்புகள் தங்களது வேட்பு மனுக்களை 2.9.11 முதல் 11.9.11 வரை கட்சி அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்ட கட்சி அலுவலகங்களில் தாக்கல் செய்யலாம் என அறிவித்திருந்தார்.அதன்படி, 11.9.11 வரை கட்சி அமைப்பு ரீதியான 52 மாவட்டங்களில் இருந்தும் பெறப்பட்ட வேட்பு மனுக்கள் விபரம்:
பதவிகள் - மனுக்கள்:மாநகராட்சி மேயர்கள்  479, மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் -7.503, நகரமன்றத் தலைவர்கள் - 1,631, நகரமன்ற உறுப்பினர்கள் - 10,775, பேரூராட்சி மன்றத்தலைவர்கள் - 3,028, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் - 16,867, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் - 4,014, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் - 23,812, மொத்த படிவங்கள் - 68,109. இதன்படி அ.தி.மு.க. கட்சியின் சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட வாய்ப்பு கோரி மொத்தம் 68,109 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வேட்பு மனுக் கட்டணமாக   17,10,47,500/-ரூபாய் பெறப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு கட்சியின் பொருளாளரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்