முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமதாஸ்,அன்புமணி மீது கொலை வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் தள்ளிவைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 18 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, செப்.- 18 - பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்டிருந்த கொலை வழக்கின் விசாரணை, சி.பி.ஐ.க்கு மாற்றப்படுமா? என்பது பற்றிய வழக்கில் தேதி குறிப்பிடாமல் ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க. அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:​8.5.06 அன்று தேர்தல் பணிகளை முடித்துவிட்டு திண்டிவனம் மொட்டையன் தெருவில் வைத்து சிலருடன் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது கருணாநிதி, ரகு என்பவர்கள் தலைமையில் 2 கார்களில் ஒரு கும்பல் அரிவாளுடன் வந்திறங்கியது. என்னை நோக்கி வந்த அந்த கும்பலை முருகானந்தம், மகேஷ் ஆகியோர் தடுத்தனர். ஆனால் முருகானந்தத்தை அந்த கும்பல் வெட்டி கொலை செய்தது. மகேஷ் படுகாயம் அடைந்தார். இந்த கும்பலில் வந்த குமாரவேல் என்பவரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தோம். நேரடி சாட்சியாக நான், போலீசில் புகார் கொடுத்தேன். அதனடிப்படையில் டாக்டர் ராமதாஸ், அன்புமணி மற்றும் அவர்களின் உறவினர்கள் பரசுராமன், சீனிவாசன், ரகு, கருணாநிதி உட்பட 15 பேர் மீது வழக்கு (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டது. முதல் மற்றும் இரண்டாவதாக முறையே ராமதாஸ், அன்புமணி ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டனர்.
அந்தத் தேர்தலில் பா.ம.க.வின் ஆதரவுடன் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டது. குண்டுகள் பாய்ந்த நிலையில் ரகு மர்மமான முறையில் 26.2.07 அன்று இறந்துபோனார். முயல் வேட்டையின்போது குண்டு பாய்ந்ததாக கூறி வழக்கை முடித்தனர். அவரது உடலை அவசர அவசரமாக எரித்தும்விட்டனர்.
இந்தநிலையில் முருகானந்தம் கொலை வழக்கின் குற்றப்பத்திரிகையை 3.1.08 அன்று போலீசார் தாக்கல் செய்தனர். அதில், அந்த வழக்கில் 5​வதாக குற்றம்சாட்டப்பட்டிருந்த ரகுவை முதல் குற்றவாளியாக மாற்றியிருந்தனர். ராமதாஸ், அன்புமணி, அவர்கள் உறவினர்கள் உட்பட 6 பேரின் பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படவில்லை.
இந்த சம்பவத்தில் ராமதாஸ், அன்புமணி ஆகியோரின் சதித்திட்டம் குறித்த கோணத்தில் விசாரணையை போலீசார் நடத்தவில்லை. முக்கியஸ்தர்களை காப்பாற்ற வேண்டும் என்ற காரணத்திற்காக ஒருதலைப்பட்சமாக போலீசார் நடந்து கொள்கின்றனர்.
கொலைக்கு காரணமானவர்கள் அரசியல் காரணங்களுக்காக காப்பாற்றப்படுகிறார்கள். இந்த போலீஸ் விசாரணையில் nullnullதி கிடைக்காது. எனவே ரோஷனை போலீஸ் நிலையத்தில் உள்ள இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும். வழக்கு விசாரணையை நடத்த போலீசுக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு கடந்த சில நாட்களாக nullnullதிபதி அரிபரந்தாமன் முன்னிலையில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டது. அரசுத் தரப்பில் தலைமை குற்றவியல் வக்கீல் ஐ.சுப்பிரமணியம், அரசு வக்கீல் மகாராஜன் ஆகியோர் ஆஜரானார்கள். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற தயாராக இருப்பதாக வாதிட்டனர்.
சி.வி.சண்முகம் தரப்பில் மூத்த வக்கீல் பி.குமார், எதிர்த்தரப்பில் மூத்த வக்கீல் அசோக்குமார் உள்ளிட்டோர் ஆஜரானார்கள். நேற்று வக்கீல் வாதம் முடிவடைந்தது. இந்த வழக்கின் தீர்ப்பை தள்ளிவைப்பதாக nullnullதிபதி அரிபரந்தாமன் அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago