முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிர்வாகத் திறமையால் மின்வெட்டை குறைத்துள்ளார் ஜெயலலிதா- எச்.ராஜா பாராட்டு

ஞாயிற்றுக்கிழமை, 18 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

காரைக்குடி,செப். - 18  - தமிழக முதல்வர் ஜெயலலிதா நிர்வாகத் திறமையால் மின்வெட்டை குறைத்துள்ளார் என்று பாரதிய ஜனதா கட்சி மாநிலை துணைத் தலை வரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான எச். ராஜா பாராட்டு தெ ரிவித்து இருக்கிறார்.  காரைக்குடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது அவர் மே ற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது - ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இரண்டாவது முறையாக, ஆட்சி ப் பொறுப்பேற்றதில் இருந்து கடுமையான விலைவாசி உயர்வு ஏற்ப ட்டு உள்ளது.  இதற்கு காரணம் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை யாகும். அரசு எண்ணை நிறுவனங்களை தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்து, அவைகள் லாபம் சம்பாதிப்பதற்காக, கச்சா எண்ணை விலை உயர்வை காரணம் காட்டுகின்றனர். தற்போது, தொட ரும் விலையேற்றம் என்பதை கூட்டணிக் கட்சிகளே ஏற்றுக் கொள்கி ன்றன.  குஜராத் மாநிலத்தில், நரேந்திர மோடி 2 நாள் உண்ணாவிரதம் இருப் பதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்தும், ஆதரவும் தெரிவித் து 2 எம்.பி.க்களை நேரடியாக, அனுப்பி வைத்ததற்கு நன்றியை தெரி வித்துக் கொள்கிறேன். முதல்வரது தீர்க்கமான முடிவை வரவேற்கிறேன். உள்துறை அமைச்சர் சிதம்பரம் தனது பேச்சில், நிதானத்தை கடைபிடி க்காமல் பேசுகிறார். மாநில சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து, மாநில போலீசார் மட்டுமே சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட முயற்சி செய்யும் போது, ராணுவம் போன்ற கூடுதல் வீரர்களையும், பயன்படு த்த வேண்டும் என்கிறார் அவர். உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத் தினால் எதிரிகள் நம்மை நெருங்க முடியாது. அதை உணராமல் அவர்  பேசுகிறார். 

தமிழகத்தைப் பொறுத்தவரை, முதல்வர் ஜெயலலிதா கடுமையான மின்வெட்டு பிரச்சினையை எப்படி சமாளிக்கப் போகிறார் என்று எதிர்க் கட்சியை சேர்ந்த பலர் ஏளனமாக நினைத்தனர். 

ஆனால், பதவியேற்ற சில தினங்களில் தனது நிர்வாகத் திறமையால் மின்வெட்டை சரி செய்துள்ளார். இதற்கு, முன் இருளில் மூழ்கிய நிலையை மாற்றிய நிகழ்வு பாராட்டுக்குரியது. 

தனது நிலத்தை, தானே அனுபவிக்க முடியாமல் இருந்த நிலையை மாற்றி நில அபகரிப்பு மீட்பு சட்டம் அனைவரும் பயன் பெறும் வகை யில் உள்ளது என்றார். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, குரு. நாகராஜன், முத்துக் கிருஷ்ணன், சபரிநாதன், கோபால், அக்னி பாலா, உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்