முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சித் தேர்தல்: தனித்து போட்டியிட பா.ஜ.க. முடிவு

திங்கட்கிழமை, 19 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,செப்.- 19 - உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து இடங்களிலும் பா.ஜ.க. தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  வரும் உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி இடங்களிலும் பா.ஜ.க. தனித்து போட்டியிடும். சில கட்சிகள் எங்களுடன் கூட்டணி அமைத்து போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளன. இந்த தேர்தலில் முக்கிய கட்சிகள் தனித்துப் போட்டியிடும் சூழ்நிலை உருவாகி உள்ளது. ஒவ்வொரு கட்சியும் தங்களது செல்வாக்கை அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்