முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரமக்குடி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜயகாந்த் மதுரை அரசு மருத்துவமனையில் ஆறுதல்

திங்கட்கிழமை, 19 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,செப்.- 19 - பரமக்குடி கலவரத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவார்களுக்கு விஜயகாந்த் ஆறுதல் கூறி நிதி உதவி  வழங்கினார். பரமக்குடியில் இமானுவேல்சேகரன் நினைவு தினத்தன்று கலவரம் மூண்டது. அப்போது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 6 பேர் பலியானார்கள். கலவரத்தில் பலர் காயம் அடைந்தனர். இதேபோல் மதுரை அருகே உள்ள சிந்தாமணியில் நடந்த கலவரத்தின் போதும் துப்பாக்கி சூடு நடந்தது. இதிலும் சிலர் காயம் அடைந்தனர். இது கலவரத்திலும் பாதிக்கப்பட்ட 19 பேர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்ப்டடு உள்ளனர். இவர்களை பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் பார்த்து ஆறுதல் கூறிவருகிறார்கள். இந்த நிலையில் தே.மு.த.க. நிறுவனத்தலைவர் விஜயகாந்த் நேற்று காலை 6.20 மணி அளவில் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்குள்ள 101,202, 219 ஆகிய வார்டுகளிலும், புதிய கட்டிடத்தில் இயங்கிவரும் ஆஸ்பத்திரியிலும் கலவரத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் 19 பேரையும் பார்த்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர்களுக்கு பழம்,பிஸ்கட்,ரொட்டி மற்றும் தலா ரூ.5 ஆயிரம் நிதி உதவிகளை வழங்கினார்.  சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். பின்னர் விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது;
பரமக்குடி கலவரத்தில் குண்டடிப்பட்டு காயம் அடைந்தவர்களை பார்க்க வந்தேன். இங்கு சிகிச்சை அளிப்பது குறித்து கேட்டறிந்தேன். நல்லமுறையில் சிகிச்சை அளிப்பதாக கூறினார்கள்.  மேலும் நல்லமுறையில் சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களை கேட்டுக்கொண்டேன்.  இவ்வாறு அவர் கூறினார்.  அரசு ஆஸ்பத்திரிக்கு விஜயகாந்த்துடன் எம்.எல்.ஏ.க்கள் சுந்தராஜன், ஏ.கே.டி.ராஜா, மாவட்ட செயலாளர் அரவிந்தன் உள்பட பலர் உடன் சென்றனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்