முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கம்யூனிஸ்டு இயக்க தலைவர் சி.சுப்பிரமணியம் மறைவு தா.பாண்டியன் இரங்கல்

திங்கட்கிழமை, 19 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். - 19 - இந்திய கம்யூனிஸ்டு இயக்க தலைவரும், சி.எஸ். என்று அழைக்கப்படுபவருமான சி.சுப்பிரமணியம்(வயது 102)  சென்னையில் நேற்று காலமானார். இவரது மறைவுக்கு தா.பாண்டியன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: 1930ம் ஆண்டுகளில் தமிழகத்தில் கம்யூனிஸ்டு இயக்கத்தை துவங்கியவர்களில் ஒருவர் சி.சுப்பிரமணியம். 

1910ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி சென்னையில் பிறந்த சி.சுப்பிரமணியம், பிரசிடென்சி கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து, மேல்படிப்புக்காக இங்கிலாந்து சென்றார். அங்கு படிப்பை முடித்ததும், இந்திய சுதந்திரப்போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். சென்னை திரும்பியதும் ஆர்யா பாலாஷ்யாம், சிங்காரவேலர், சக்கரை செட்டியார் ஆகியோருடன் இணைந்து பணியாற்றினார். பின்னர் அமிர் ஹைதர்கான், பி.சுந்தரய்யா, வி.சுப்பையா ஆகியோருடன் சி.சுப்பிரமணியம் இணைந்து தமிழகத்தில் கம்யூனிஸ்டு கட்சியை துவக்கினார். சி.எஸ். என்று கட்சியினராலும், பொது மக்களாலும் அன்புடன் அழைக்கப்படும் சி.சுப்பிரமணியம் மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். 1942ம் ஆண்டில் அரசியல் ரீதியாக கம்யூனிஸ்டு இயக்கம் துவங்கியதும் இவர்களது நட்பில் விரிசல் ஏற்பட்டது.  பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்களுக்கும் நல்ல நண்பராகவும், அரசியல் ஆசானாகவும் இருந்த சி.எஸ்., தனது மனைவியுடன் கோபிசெட்டி பாளையத்தில் வசித்து வந்தார். அங்கு இவரது மனைவி டாக்டர் சுகுணா, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். அதன்பிறகு சென்னைக்கு கட்சியினரால் கொண்டுவரப்பட்ட  சி.எஸ்., இங்கு தனது 102 வயதையும் பொருட்படுத்தாமல், கட்சிப்பணியாற்றினார். இறக்கும்வரை ஆரோக்கியமாகவே இருந்துவந்த சி.எஸ். இன்று (நேற்று) காலை 8.30 மணிக்கு இறந்தார். இவரது உடல் கட்சியினர் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக எண்.41-பி, சிட்கோ தொழிற்பேட்டை, என்.சி.பி.எச். பப்ளிஷிங் அவுஸ், அம்பத்தூர் என்ற இடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இன்று (19ம் தேதி) காலை 11 மணியளவில் இறுதிச்சடங்கு நடைபெறும்.

சி.எஸ். மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கும்.

இவ்வாறு தா.பாண்டியன் அந்த இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago