முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவை அரசு மருத்துவமனையில் சுகாதார துறை அமைச்சர் விஜய் திடீர் ஆய்வு

திங்கட்கிழமை, 19 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

கோவை, செப்.- 19 - கோவை அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதார துறை அமைச்சர் டாக்டர் விஜய் திடீர் ஆய்வு செய்தார். தமிழக சுகாதார துறை அமைச்சர் டாக்டர் விஜய் நேற்று காலை கோவை வந்தார். அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றார். அவருடன் தமிழக தொழில் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும் சென்றார்.

அமைச்சர்  டாக்டர் விஜய் முதலில் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவ வழங்கும் பிரிவுக்கு சென்று போதிய மருந்துகள் இருப்பில் உள்ளதா? நோயாளிகளுக்கு ஒழுங்காக மருந்து மாத்திரைகள் வழங்கப்படுகிறதா என்று அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் இருதய அவசர சிகிச்சை பிரிவுக்கு சென்று அங்குள்ள கருவிகள் நன்றாக செயல்படுகிறதா? படுக்கை வசதிகள் உள்ளாதா என்பதையும் ஆய்வு செய்தார். பின்னர் திவிர அவசர சிகிச்சை பிரிவு, நரம்பியல்பிரிவு, சென்று ஆய்வு செய்தார். இதை தெர்டர்ந்து நாய்கடிக்கு சிகிச்சை அளிக்கும் பிரிவுக்கு சென்று 6 வகையான மருந்துகள் வழங்கி முறையாக சிகிச்சை அளிக்கப்படுகிறதா என்பதையும் அங்கு பணிபுரியும் டாக்டர்களிடமும் நர்சுகளிடம் விசாரணை நடத்தினார். இதை தொடர்ந்து அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.50 கோடி செலவில் 1000 படுக்கை வசதிகளுடன் நவீன மருத்துவமனை கட்டப்பட உள்ள இடத்தையும் பார்வையிட்டார்.

இதை தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் டாக்டர் விஜய் பேட்டியணித்தார் அப்போது அவர் கூறியதாவது.

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் பொது மக்களுக்கு நல்லமுறையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் தரமான மருத்துகள் வழங்கப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிடுள்ளார் அதன் படி அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆய்வு நடத்தி வருகிறேன். இந்த மருத்துவமனையை பொறுத்த வரை கடந்த தி.மு.க. ஆட்சியில் சரியான பராமரிப்பு நடக்கவில்லை இங்குள்ள சில கருவிகள் பழுது அடைந்ததை கூட இதுவரை சரி செய்யவில்லை. தற்போது நான் ஆய்வு செய்து சரிசெய்ய உத்தரவிடுள்ளேன், மேலும் தனியார் மருத்துவமனைக்கு இணையாக பொதுமக்களுக்கு மருத்துவம் கிடைக்க வழி வகை செய்ய உத்தரவிட்டுள்ளேன். விரைவில் கோவை அரசு மருத்துவமனை ஏழை மக்களுக்கு சிறப்பான மருத்துவசதி கிடைக்கும் என்று கூறினார். அமைச்சருடன் கலெக்டர் மு.கருணாகரன் எம்.எல்.ஏக்கள் தா.மலரவன் சேலஞ்சர் துரை மற்றும் மருத்துவ அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்