முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.பி.பி. சரணுக்கு தண்டனை பெற்றுத்தரும்வரை ஓயமாட்டேன் நடிகை சோனா ஆவேசம்

திங்கட்கிழமை, 19 செப்டம்பர் 2011      சினிமா
Image Unavailable

சென்னை, செப். - 19 - பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற, எஸ்.பி.பி. சரணுக்கு தகுந்த தண்டனை பெற்றுத்தரும் வரை ஓயமாட்டேன் என்று நடிகை சோனா கூறியுள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு: மங்காத்தா பட வெற்றியை முன்னிட்டு, நடிகர் வைபவ் தி.நகர் வீட்டில் கடந்த 14​ந்தேதி இரவு மது விருந்து நடைபெற்றது. இந்த மது விருந்தில் நடிகை சோனா, பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியனின் மகன் எஸ்.பி.பி. சரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மது விருந்தின் போது, எஸ்.பி.பி. சரண் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக, நடிகை சோனா பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். இந்த சம்பவத்தை அடுத்து, சோனா தனது வீட்டில் தங்காமல் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தார்.  இந்தநிலையில் இவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக அவரை ஓட்டல் ஊழியர்கள் தி.நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சோனாவை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். இதற்காக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சோனா, மது விருந்தில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து அளித்த பரபரப்பு பேட்டி வருமாறு:​
எஸ்.பி.பி. சரண் என்னிடம் தவறாக நடந்து கொள்வது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே பல சம்பவங்களில் என்னிடம் அநாகரீகமாக நடந்து கொண்டுள்ளார். வைபவ் வீட்டில் ஏற்பாடு செய்திருந்த மது விருந்துக்கு எனது நண்பர்கள் பலர் வருகிறார்கள் என்பதால் நானும் செல்ல சம்மதித்தேன்.   அங்கிருந்த எஸ்.பி.பி. சரண் மது மயக்கத்தில் என்னிடம் நெருங்கினார். ஆபாச வார்த்தைகளால் என்னை வர்ணித்தார். தவறாக நடக்க முற்பட்டார். நான் கோபத்தை வெளிப்படுத்தியதால், என்னை அவர் தாக்கினார். வெங்கட்பிரபு ஓடி வந்து சரணை தள்ளிவிட்டு என்னை காப்பாற்றினார். மற்ற நண்பர்களும் எனக்கு ஆதரவாக வந்தனர். அங்கு எஸ்.பி.பி. சரண் நடந்து கொண்ட விதம் என்னை மிகவும் பாதித்து விட்டது. சினிமாக்களில் கவர்ச்சி உடை அணிந்து டான்ஸ் ஆடுவது எனது தொழில் அதை வைத்து எனது நடத்தை மோசமானது என்று அர்த்தம் கொள்வதா? எந்த சூழ்நிலையிலும் நான் வழி தவறிச் சென்றது கிடையாது. சம்பவம் நடந்த மறுநாள் நண்பர்கள் பலரும் எனக்கு போன் செய்து, நடந்த சம்பவத்தை மறந்து விடுமாறு, கேட்டுக் கொண்டனர். நடந்த தவறுக்கு சரண் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொன்னேன். அவர் அதை செய்ய வில்லை. ஆனால் பலரும் என்னை தான் நெருக்குகிறார்கள். நான் பாதிக்கப்பட்டதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மிகவும் நல்லவர். அவரிடமும் விபரத்தை விளக்கி விட்டேன்.   எஸ்.பி.பி. சரண் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீசில் புகார் செய்துள்ளேன். nullநீதி கிடைக்கும் வரை அவரை சும்மா விடப் போவதில்லை. அவர் பெரிய இடத்து பிள்ளை என்பதை மறுப்பதற்கு இல்லை. அதற்காக, அவரது செயலை நியாயப்படுத்தும் எந்த வகை முயற்சியையும் எற்றுக் கொள்ள முடியாது. தவறுக்கு தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்.
இவ்வாறு சோனா ஆவேசமாக கூறினார்.
இதுபற்றி எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கூறுகையில், இந்த சம்பவம் கேள்விப்பட்டு, ஐதராபாத்தில் பாடல் பதிவில் இருந்த நான், அதை ரத்து செய்து விட்டு சென்னைக்கு வந்தேன். பொதுமன்னிப்பு கேட்குமாறு சரணிடம் நான் வலியுறுத்தினேன். மது விருந்தில் கலந்து கொண்ட அவனது நண்பர்களை வைத்து பிரச்சினைக்கு சுமூகமாக தீர்வு காணும் படியும் அவனுக்கு அறிவுரை வழங்கினேன் என்றார். சோனா புகாரை விசாரித்து வரும் போலீஸ் கமிஷனர் திரிபாதி கூறுகையில், எல்லா வழக்குகளும் எங்களுக்கு முக்கியமானதுதான். இதில் முக்கிய பிரமுகர்கள், சாதாரணவர்கள் என்றெல்லாம் பார்ப்பதில்லை. புகார் மற்றும் வழக்கின் தன்மை மட்டுமே ஆராயப்படும். இந்த விஷயத்தில் உண்மையை கண்டறிய பல்வேறு வகையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்