முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.எஸ். விஸ்வநாதன் எனக்கு காட் பாதர்: பாடகர் கிரீஷ்

செவ்வாய்க்கிழமை, 20 செப்டம்பர் 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை செப் 20 - எம். எஸ். விஸ்வநாதன் எனக்கு காட் பாதர் என்றார் பின்னணி பாடகர் கிரீஷ் ஸாயி சரணம் இந்த எதிர்பார்ப்பு உருவகங்களை உடைத்தெரிகிற படைப்பாக உருவாகியிருக்கிறது.  பாரம்பரிய இசையின் பண்பு கெடாமலும் கேட்க இனிக்கும் உயரிய ஒலி நுட்பத்திலும் ஆடம்பரமான அழகான இசைக் கருவிகளின் இனிமையிலூம் நட்சத்திரக் குரல்களின் பங்களிப்பிலும் உருவாகியிருக்கிறது.

இனிமை, புதுமையுடன் உருவாகியுள்ள இந்தப் பாடல்களுக்கு இசை ஓர் இளமை இசையமைப்பாளர் கிரீஷ்.

பிரமாண்டமான செலவில் எடுக்கப்படும் திரைப்பாடல்களுக்கான உழைப்பிலும் செலவிலும் ஸாயி சரணம் தெய்வீகப் பாடல்கள் உருவெடுத்துள்ளன.

கிரீஷ், ரஜீவன் டேவிட் என்கிற ப்யானோ கலைஞரிடம் ப்யானோ கற்றவர்.  பல்வேறு குருக்களிடம் கர்நாடக இசையைக் கற்றவர்.  பல இசைக் கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர்.  பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடம் எட்டு ஆண்டுகள் தொழில் நுட்ப உதவியாளராக பணியாற்றி பரந்த அனுபவம் பெற்றவர்.  பல ஆவண விளம்பரப் படங்கள், 3ஈ அனிமேஷன் படங்களுக்கு இசையமைத்திருப்பவர்.

ஏற்கனவே கருட ராஜனே சரணம் என்கிற தெய்வீகப் பாடல் தொகுப்பு இவரது இசையில் வெளியாகியுள்ளது.  இவரது இசையில் இப்போது உங்கள் கையில் ஷீர்டி சாய்பாபா புகழ், மகிமை போற்றும் ஸாயி சரணம் தவழ்கிறது.  இந்த ஒலிப்பேழையில் 13 பாடல்கள் உள்ளன.  கீதா தெய்வசிகாமணி ஆறு பாடல்களையும் சீர்காழி சிற்பி ஐந்து பாடல்களையும் எழுதியுள்ளனர்.  தியானம் செய்ய சாயி போற்றி இரண்டு நாயவரி பாடல்களும் உள்ளன.  மலேசியா தயாரிப்பாளருக்காக நீங்காத நினைவுகள் என்கிற பாப் ஆல்பமும் இவர் இசையில் உருவாகி, படப்பிடிப்பு நடந்து வருகிறது.

சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் விளம்பரங்களுக்கு இசையமைப்பது ஒரு சவால்.  சில வினாடிகளில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.  அதில் ஈடுபட்டு தடம்பதித்த கிரீஷின் அடுத்த இலக்கு மெட்டளவில் பேசவைக்கும் பக்திப் பாடல்கள் இனி அடுத்தது அகலமான வாய்ப்பு தரும் திரைப்பட இசை தானே...

நான் ஹாரிஸ் ஜெயராஜிடம் பல படங்களில் பணியாற்றியுள்ளேன்.  திரைப்பட வாய்ப்பில் நல்லதொரு தொடக்கத்துக்காக காத்திருக்கிறேன்.  இப்போதைய இசைப்பணிகள், படைப்புகள் திரை நுழைவுக்கான விசிட்டிங் கார்டாக உதவும் என்று நம்புகிறார்.  கிரீஷ் மேலும் அவர் கூறியதாவது.

தமிழக இசையமைப்பாளர்களின் இவரைக் கவர்ந்தவர் யார்?  மெல்லிசைக்கும் மெலேடிக்கும் பெயர் பெற்றவர்.  எம். எஸ். வி. பல மெலேடி ஹிட்ஸ் சாதனை செய்தவர் இளையராஜா, ஏ. ஆர். ரகுமான் டிஜிட்டல் சவுண்டை திரையில் பிரபலப்படுத்தியவர்.  வெஸ்டர்ன் மியூசிக்கை அழகாக கலந்து வெற்றி பெற்றவர்.  ஹாரிஸோ சவுண்ட், ட்யூன் எல்லாவற்றிலூம் ஜெயித்தவர்.  எனக்கு எம். எஸ். வி காட் பாதர் 

என்றால் மற்ற எல்லாரும் மானசீகமான குருக்கள் என்று சொல்லலாம் என்கிறார் கிரீஷ்.

ஸாயி சரணம் ஆடியோ வெளியீடு விழாவுக்கு அணுகிய போது தான் இசையமைத்த பாடல் தொகுப்பை எம். எஸ். வி யிடம் கொடுத்திருக்கிறார் கிரீஷ்.  பாடல்களைக் கேட்ட மெல்லிசை மன்னர், பழமை மாறாத புதுமை என்று பாராட்டியதுடன் இசை வெளியிட சந்தோஷ சம்மதமும் தந்திருக்கிறார்.  இதையே தன் தகுதிக்குக் கிடைத்த முதல் தரச்சான்றிதழ் என்று பூரிக்கிறார் கிரீஷ்.  இவரது மனத்தில் ஏராளமான இசைக் கனவுகள் அலையடிக்கின்றன.  அவை மெய்ப்பட வாழ்த்துங்களேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்