முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு உதவிகளை கிராமம் - கிராமமாக வழங்கிய அமைச்சர்கள்

புதன்கிழமை, 21 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,செப்.21 - இல்லத்தரசிகளுக்கு மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப்புகள், கிராமப்புற ஏழை மக்களுக்கு கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் சிறப்பு திட்டங்களை அண்ணா பிறந்த நாளன்று முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்ததை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர் சிறப்பு திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கினர். உதவித் தொகையையும், திருமாங்கல்யத்திற்கான தங்கத்தையும் அமைச்சர் ஜெயபால் வழங்கினார். நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் 30 பயனாளிகளுக்கு வெள்ளாடுகள் வழங்கப்பட்டன. ஊட்டி அருகே 600 பயனாளிகளுக்கு கிரைண்டர், மிக்சிகளை அமைச்சர் புத்திசந்திரன் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைச்சர்கள் சண்முகநாதன், செல்லப்பாண்டியன் ஆகியோர் கறவை மாடுகளையும், ஆடுகளையும் வழங்கினர். வேலூர் மாவட்டத்தில் அமைச்சர் விஜய், ஏழை பெண்கள் 393 பேருக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்குத் தங்கமும் வழங்கினார். 

திண்டுக்கல் மாவட்டத்தில் 20 ஏழை பெண்களுக்கு திருமண உதவித் தொகையும், தாலிக்கு 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் 60 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது. பெரம்பலூரில் இளவரசன் எம்.பி. 250 ஏழை பெண்களுக்கு திருமண உதவித் தொகையும், திருமாங்கல்யத்திற்கான தங்கமும் வழங்கினார். அரியலூர் மாவட்டத்தில் 225 ஏழை பெண்களுக்கு திருமண உதவித் தொகையும் 4 கிராம் தங்கமும் வழங்கப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் சிறப்பு திட்டத்தின் கீழ் ஆடுகள் வழங்கப்பட்டன. 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இலங்கை அகதிகள் முகாமில் 55 வீடுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்டத்தில் 88 பயனாளிகளுக்கு திருமண உதவித் தொகை, திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 31 பயனாளிகளுக்கு கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் வழங்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்