Idhayam Matrimony

அதிகாரிகளுடன் அமைச்சர் கே.பி.முனுசாமி ஆலோசனை

புதன்கிழமை, 21 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப். 21 - சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்மழை பெய்து வருவதையொட்டி வெள்ளத் தடுப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதற்காக அதிகாரிகளுடன் அமைச்சர் முனுசாமி கோட்டையில் இன்று ஆலோசனை நடத்தினார்.  கூட்டம் முடிந்ததும் தாழ்வான பகுதிகளுக்குச் சென்று அமைச்சர் பார்வையிட்டார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.  சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை இடை விடாமல் மழை கொட்டியது. மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அதிகாரிகளை அழைத்து உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி அவசர ஆலோசனை நடத்தினார்.  சென்னை கோட்டையில் நேற்று காலை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும்  குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கருத்தையா பாண்டியன், சென்னை குடி நீர் வாரிய தலைவர் கோபால், சென்னை மாநகர கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மழை காலங்களில் சென்னையில் உள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுப்பது வழக்கமாக இருப்பதால் வருகிற காலக்கட்டத்தில் அதற்கு நிரந்தர தீர்வு காண்பது தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டம் முடிந்ததும் அமைச்சர் முனுசாமி, வியாசர்பாடி கணேசபுரம் பாலத்திற்கு சென்று பார் வையிட்டார்.  குறைந்த அளவு மழை பெய்தால் கூட இந்தப் பாலத்திற்கு அடியில் சுமார் 2 அடி உயரத்திற்கு வெள்ள நீர் சேர்ந்து அங்கு பெறும் பிரச்சினை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கு உடனடியாக தீர்வு காணும்படி, அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார். ஒட்டேரி நல்லான் கால்வாயையும் அவர் பார்வையிட்டார்.  மழை காலங்களில் அந்த கால்வாய்க்கு வரும் வெள்ள நீர் தங்குத் தடையில்லாமல் செல்ல வேண்டியதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யும் படி அமைச்சர் உத்தரவிட்டார். இதுபோல, பல்வேறு வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்து மேற்கொண்டு  அதில் செய்ய வேண்டிய பணிகளை அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்