முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 4088 பேர்

புதன்கிழமை, 21 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,  செப்.21 - தமிழகத்தில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 4,088 பேர் செல்கிறார்கள் என்று அமைச்சர் முகமது ஜான் கூறினார். தமிழக ஹஜ் கமிட்டியின் ஆலோசனை கூட்டம் நேற்று சென்னையில் பிற்படுத்தப்பட்டோர் அமைச்சர் முகமதுஜான் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய ஹஜ் கமிட்டியின் துணை தலைவர் அபுபக்கர், பிற்படுத்தப்பட்டோர் துறை செயலாளர் சந்தானம் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் அமைச்சர் முகமதுஜான் பேசுகையில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆணைக்கிணங்க  ஹஜ் கமிட்டியின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. 2011-ம் ஆண்டிற்கு ஹஜ் புனிதபயணம் மேற்கொள்ள பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் மனு செய்தனர். தமிழ்நாட்டில் மக்கள் தொகை அடிப்படையில் 3,057 பேருக்கு ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால் முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து கூடுதலாக 761 பேர் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கூறினார். மொத்தத்தில் தமிழகத்தில் இருந்து 3,818 பேர் புனித பயணம் மேற்கொள்ள இருக்கிறார்கள். அதில் ஆண்கள் 1,921 பேர். பெண்கள் 1,893 பேர். மற்றவர் 4 பேர். இது தவிர பாண்டிச்சேரியில் இருந்து 59 பேரும், அந்தமானை சேர்ந்தவர்கள் 29 பேரும் சேர்த்து 4,088 பேர் சென்னையில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொள்கிறார்கள். 

இந்த புனிதப் பயணத்திற்கு ஜெட்டா செல்வதற்கு 14 விமானங்கள் இயக்கப்படுகின்றன. முதல் விமானம் அக்டோபர் 17-ந் தேதி தொடங்கி அக்டோபர் 31-ந் தேதி வரை இயக்கப்படும். கூடுதலாக ஹாஜிகளுக்கு மேலும் ஒரு விமானம் ஏற்பாடு செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இந்த நல்வாய்ப்பினை எனக்கு அளித்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

இவ்வாறு அமைச்சர் முகமதுஜான் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago