முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடு அபகரிப்பு: திமுக வட்ட செயலாளர் கைது

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,செப்.22 - மதுரையில் ரூ 1 கோடி மதிப்புள்ள வீடு அபகரிப்பு புகாரில் திமுக வட்ட செயலாளர் கலர்காசி கைது செய்யப்பட்டார்.  நில அபகரிப்பு தொடர்பாக தமிழக அரசு தனிப்பிரிவு ஒன்றை துவக்கியது. இதில் தமிழகம் முழுவதும் ஏராளமானோர் புகார்களை கொடுத்து வருகிறார்கள். இந்த புகார்களின் அடிப்படையில் திமுக முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதோடு, அட்டாக்பாண்டி, பொட்டு சுரேஷ் உள்பட ஏராளமானோர் மீது குண்டர்சட்டமும் பாய்ந்துள்ளது. இந்த நிலையில் மதுரையில் ரூ. 1 கோடி மதிப்புள்ள வீட்டை அபகரித்ததாக திமுக வட்ட செயலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

   மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியை சேர்ந்தவர் பிரசாத். இவர் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கொடுத்துள்ள புகாரில், மதுரை தெப்பக்குளம் டீச்சர் காலனியில் ரூ கோடிமதிப்புள்ள வீட்டை மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த 52 வது வட்ட திமுக வட்ட செயலாளர் கலர்காசி அபகரித்து விட்டார். வீட்டையும் காலி செய்யாமல், வீட்டின் ஒருபகுதியை ரேசன் கடைக்கும் வாடகைக்கு விட்டுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுத்து வீட்டை மீட்டுத்தரும்படி கூறியிருந்தார்.

    இது தொடர்பாக போலீசார் கொலை மிரட்டல் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து திமுக வட்ட செயலாளர் கலர்காசியை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago