முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சியுடன் திருவெறும்பூர் பேரூராட்சியை இணைத்தது செல்லாது

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, செப்.22 - கடந்த தி.மு.க. ஆட்சியில் திருச்சி நகராட்சியுடன் திருவெறும்பூர் பேரூராட்சியை இணைத்து அரசு உத்தரவிட்டது உத்தரவிட்டது செல்லாது என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து விபரம் வருமாறு:-

திருச்சி- திருவெறும்பூரை சேர்ந்த பாலசந்தர் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- திருவெறும்பூர் பேரூராட்சிகளில் மட்டும் 17,000 மக்கள் உள்ளனர். இங்கு புகழ் பெற்ற எறும்பீஸ்வரர் கோயில், பல்வேறு தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளன. கடந்த 6.9.2010 அன்று திருச்சி மாநகராட்சியுடன் திருவெறும்பூர் பேரூராட்சி மற்றும் பாப்பாகுறிச்சி, எல்லக்குடி, ஆலத்தூர் ஊராட்சிகளை இணைத்து எல்லையை விரிவுபடுத்துவது என்று திருச்சி மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது. 

இதன் அடிப்படையில் திருவெறும்பூர் பேரூராட்சி, ஊராட்சிகளின் கருத்துக்களை தெரிவிக்கும்படி திருச்சி மாநகராட்சி கோரிக்கை விடுத்தது. ஆனால் இந்த இணைப்புக்கு திருவெறும்பூர் பேரூராட்சியும், 4 ஊராட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றின. இதை கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் 28.9.2010, 15.10.2010, 3.1.2011 ஆகிய தேதிகளில் அரசாணை வெளியிட்டார். இந்த அரசாணையானது தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிகளுக்கு எதிரான முறையாகும். மற்றும் திருச்சி மாநாகராட்சி சட்டத்திற்கும் எதிரானது. ஏனெனில் இந்த அரசாணை குறித்தும், இணைப்பு குறித்தும் எந்த பத்திரிகைகளிலும் விளம்பர அறிவிப்பு வெளியிடப்படவில்லை. பொதுமக்களிடமும் கருத்து கேட்கப்படவில்லை. 

இந்த இணைப்பை குறித்து திருவெறும்பூர் பேரூராட்சி மற்றும் ஊராட்சிகள் நிறைவேற்றிய தீர்மானமும் கருத்தில் கொள்ளவில்லை. ஆகையால் இது தொடர்பான அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரியிருந்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன், இதன் மீதான அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தார். இந்த தடையை நீக்கக்கோரி அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி கிருபாகரன் திருச்சி மாநகராட்சியிடம் திருவெறும்பூர் பேரூராட்சியை இணைத்தது தொடர்பான அரசாணையை ரத்து செய்வதாக உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்