முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக கவர்னர் ரோசய்யா ஊட்டி வந்தார்

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

ஊட்டி, செப்.23 - தமிழக கவர்னர் ரோசய்யா ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி வந்தார். தமிழக கவர்னராக பொறுப்பேற்றுள்ள ரோசய்யா பதவியேற்றபின் முதன் முறையாக நேற்று ஊட்டி வந்தார். கோவையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஊட்டியிலுள்ள தீட்டுக்கல் ஹெலிகாப்டர் தளத்தில் தனது மனைவி சிவலட்சுமியுடன் வந்திறங்கினார். அவருக்கு நீலகிரி கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் மலர்கொத்து கொடுத்து வரவேற்றார். தொடர்ந்து ஹெலிகாப்டர் தளத்திலிருந்து கார்மூலம் ராஜ்பவனுக்கு வந்த கவர்னருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் கையசைத்து வரவேற்பு கொடுத்தனர். ராஜ்பவன் மாளிகை வந்த கவர்னர் ரோசய்யாவிற்கு காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக், எஸ்.பி.நிசாமுதீன், மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மல்ராஜ், கோட்டாட்யர் காந்திமதி, ராஜ்பவன் தோட்டக்கலை இணை இயக்குநர் ஆல்தொரை, உதவி இயக்குநர் ராஜ்கோபி மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் மலர்கொத்துகளை கொடுத்து வரவேற்பு கொடுத்தனர்.  

அதனைத்தொடர்ந்து ராஜ்பவன் மாளிகையில் ஓய்வெடுத்த கவர்னர் மாலையில் அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம் ஆகிய சுற்றுலா ஸ்தலங்களை தனது குடும்பத்தாருடன் சென்று பார்வையிட்டார். இன்று காலை தொட்டபெட்டா, ரோஜா பூங்கா மற்றும் குன்னூரில் சிம்ஸ்பூங்கா உள்ளிட்ட சுற்றுலா ஸ்தலங்களை பார்வையிடுகிறார். அதன்பின்னர் 24-ந் தேதி பைக்காரா படகு இல்லம் செல்லும் அவர் சங்கு படகு சவார் செய்கிறார். இதற்காக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்பின்னர் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு சென்று அப்பர் கார்குடியில் ஓய்வெடுக்கிறார். தொடர்ந்து 25-ந் தேதி காலை ஊட்டியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை சென்று அங்கிருந்து விமானம் மூலம் பெங்களூரு செல்கிறார். கவர்னர் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்