முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை நீக்க முதல்வர் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, செப்.23 - மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.  நேற்று போயஸ் கார்டனிலிருந்து அமைச்சரவை கூட்டத்திற்கு முதல்வர் ஜெயலலிதா கோட்டைக்கு கிளம்பியபோது, நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-

கேள்வி: மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீது நிதித்துறையிலிருந்து பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிய கடிதத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளதே?

பதில்: திட்டவட்டமாக 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பது தெரிகிறது. சி.ஏ.ஜீ. ரிப்போர்ட் படி 2ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பி.சிதம்பரம் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது பிரதமர் மன்மோகன்சிங் உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும். ஆ.ராசா மீது சி.பி.ஐ. நடத்திய விசாரணையை போல் ப.சிதம்பரம் மீதும் விசாரணை நடத்த வேண்டும். 

கேள்வி: தி.மு.க. தரப்பில் ராசா, கனிமொழி வழக்கில் இந்த தகவல் உதவிகரமாக இருக்கும் என்று கூறப்படுகிறதே? 

பதில்: இதுபற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஏற்கனவே நான் சொன்ன கருத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். 

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்